கம்பராமாயணம் 4686 · கிட்கிந்தா 14.2

Section கிட்கிந்தா காண்டம் / 14. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மலையே போல்வான்; மா கடல் ஒப்பான்; மறம் முற்றக்
கொலையே செய்வான்; கூற்றை நிகர்ப்பான்; கொடுமைக்கு ஓர்
நிலையே போல்வான், நீர்மை இலாதான்; நிமிர் திங்கள்
கலையே போலும் கால எயிற்றான் கனல் கண்ணான்.

பொருள் · Meaning in Tamil

(அந்த அசுரன்) மலையே போல்வான் - (தோற்றத்தில்) மலையைப் போன்றவன்; மால் கடல் ஒப்பான் - (உருவத்தின் நிறத்தாலும் பரப்பாலும்) பெரிய கரிய கடலைப் போன்றவன்; மறம் முற்ற, கொலையே செய்வான் - கொடுமையில் முதிர்ச்சியடைந்து யாவரையும் கொன்று தீர்ப்பவன்; கூற்றை நிகர்ப்பான் - இயமனையே ஒத்திருப்பவன்; கொடுமைக்கு - கொடுமையென்னும் குணத்திற்கு; ஓர் நிலையே போல்வான் - ஓர் இருப்பிடமாவான்; நீர்மை இலாதான் - நற்பண்பு சிறிதும் இல்லாதவன்; நிமிர் - (வானில்) எழுந்து விளங்கும்; திங்கட் கலையே போலும் - சந்திரனின் பிறை போல் விளங்கும், கால எயிற்றான் - நச்சுப்போன்ற பற்களையுடையவன்; கனல் கண்ணான் - (நெருப்புப் போன்று) கனல் கக்கும் கண்களையுடையவன்.

அந்த அசுரனின் உருவத்தின் வலிமை உயர்வு முதலியவற்றிற்கு மலையும், நிறம், பெருமை விரிவு முதலியவற்றிற்குக் கடலும் உவமைகளாயின. மால்: கருமை, பெருமைகளை உணர்த்தியது. காலம்: கரியநஞ்சு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He was like a mountain; he resembled the great dark sea; ripe in cruelty,
  2. he did nothing but kill; he was the equal of Death; for wickedness
  3. he was its very dwelling place, a creature without goodness;
  4. his deadly fangs were like the crescent of the rising moon, his eyes were fire.

What the poem says

A portrait of the asura who comes upon the sleeping monkeys. The mountain conveys his height and strength, the sea his dark colour and vastness. His curved fangs gleam like a crescent moon, and the word for them carries the sense of black poison.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1malaiyē pōlvāṉ; māl kaṭal oppāṉ; maṟam muṟṟa
kolaiyē ceyvāṉ; kūṟṟai nikarppāṉ; koṭumaikku ōr
nilaiyē pōlvāṉ, nīrmai ilātāṉ; nimir tiṅkaṭ
kalaiyē pōlum kāla eyiṟṟāṉ kaṉal kaṇṇāṉ.