கம்பராமாயணம் 4687 · கிட்கிந்தா 14.3

Section கிட்கிந்தா காண்டம் / 14. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கருவி மா மழை கைகள் தாவி மீது
உருவி மேனி சென்று உலவி ஒற்றலால்
பொரு இல் மாரி மேல் ஒழுகு பொற்பினால்
அருவி பாய்தரும் குன்றமே அனான்.

பொருள் · Meaning in Tamil

(அந்த அசுரன்) கருவி மாமழை - (உலகம் நடைபெறுவதற்கு) முதற்காரணமான பெரிய மேகங்கள்; கைகள் தாவி - அவன் கைகளில் தாவி; மீது உருவி மேனி சென்று - ஊடுருவி அவனது உடலில் சென்று; உலவி - உலாவி, ஒற்றலால் - படிதலாலும்; பொருவு இல்மாரி - ஒப்பில்லாத மழைநீர்; மேல் ஒழுகு பொற்பினால் - அவன் மேல் பெருகி வழிந்த அழகாலும்; அருவி பாய்தரும் - நீரருவிகள் பாய்ந்தோடி வரும்; குன்றமே அனான் - ஒரு மலையையொத்தவனானான்.

கருவி: காரணம். மின்னல் இடி முதலியவற்றோடு கூடி வருவதால் கருவி மழை என்பதைத் தொகுதியான பெரிய மேகம் எனவும் கொள்ளலாம். பழைய நூல்களில் இவ்வழக்கு உண்டு. (குறுந். 42, மணி. 17-92) அந்த அசுரனின் தோள்கள்மேலும் உடம்பின் மேலும் மேகங்கள் தவழ்ந்து பெருகுமாறு மழைநீரைப் பொழிவதால், மேகங்கள் தன்மேல் உலாவப் பெற்று நீரருவி பாயும் மலை அவனுக்கேற்ற உவமையாகும். சிலேடையணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The great rain-clouds leapt onto his arms, and above them
  2. passed through and moved over his body, pressing on him,
  3. and through the beauty of matchless rain streaming down over him
  4. he was like a mountain where waterfalls come leaping down.

What the poem says

The demon is so tall that clouds drift across his shoulders and rain runs down his body, making him look like a mountain with waterfalls pouring from it. The image works both ways at once, describing the monster and a peak, which is why it is classed as a figure of double meaning.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1karuvi mā maḻaikaḷ kaikaḷ tāvi mītu
uruvi mēṉi ceṉṟu ulavi oṟṟalāl
poru il māri mēl oḻuku poṟpiṉāl
aruvi pāytarum kuṉṟamē aṉāṉ.