கம்பராமாயணம் 4689 · கிட்கிந்தா 14.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பிறங்கு பங்கியான் - விளங்கும் செம்பட்டை மயிரையுடையவன்; பெயரும் பெட்பினில் - (தான் நடந்து) செல்லும் தன்மையில்; கறங்கு போன்று உளான் - காற்றாடியை யொத்துள்ளவனாய், பிசையும் கையினான் - (கோபத்தால்) பிசையும் கைகளையுடையவன்; அறம் கொள் சிந்தையார் - தரும சிந்தனையுள்ளவர்களும்; நெறி செல் ஆய்வினால் - வழி நடந்துவந்த களைப்பினால், உறங்குவாரை - தூங்குகின்றவர்களுமாகிய அந்த வானர வீரர்களை; ஒல்லை வந்து எய்தினான் - விரைவில் வந்து சேர்ந்தான்.
இராமபிரானின் தொண்டில் கருத்தாய்ச் செல்லுவதால் வானரரை 'அறங்கொள் சிந்தையார்' என உயர்த்திக் கூறினார். ஆய்வு: நுணுகுதல் (இளைத்தல்). கை பிசைதல்: கொடுமைக்குறி. பங்கி: ஆண்பால் தலைமயிர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He with his shining tawny hair, who in his gait
- was like a whirling wind, he of the wringing hands,
- came swiftly upon those of righteous mind
- who lay sleeping, worn out by travelling the road.
What the poem says
The asura hurries toward the monkeys, spinning along like a whirlwind and wringing his hands in rage. The poet calls the sleeping monkeys "those of righteous mind" because they are on Irāmaṉ's errand, and their sleep comes from the weariness of the journey.