கம்பராமாயணம் 4690 · கிட்கிந்தா 14.6
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
காலனே அனான் - யமனைப் போன்றவனாகிய துமிரன் என்ற அந்த அசுரன்; பொய்கை என்னது என்று உணர்ந்தும் - இந்தத் தடாகம் எனக்கு உரியது என்று அறிந்தும்; எய்தினார்கள் - இங்கு வந்து சேர்ந்தவர்களாகிய; புல்லியோர் - அற்பர்கள்; யார் - யாவர்; ஆ இது என் - ஆ இது என்ன வியப்பு! எனா - என்று சொல்லிக் கொண்டு; ஐயன் அங்கதன் - தலைவனான அங்கதனுடைய; அலங்கல் மார்பினில் - மாலையணிந்த மார்பிலே; கையின் மோதினான் - (தன்) கையினால் அறைந்து தாக்கினான்.
'இப் பொய்கை எனது என்று யாவருக்கும் தெரிந்திருந்தும் இங்கு வந்து சேர்ந்தவர்கள் அறிவில்லாதவர்களே; இப்படியும் அறிவில்லாதவர்கள் இருக்கின்றார்களே' என்று மிக்க செருக்கினால் கூறிக் கொண்டே ஆழ்ந்து உறங்கும் அங்கதனது மார்பில் ஓங்கியறைந்தனன் துமிரன் என்பது. ஆ - வியப்பிடைச் சொல். இது எனா என்பதிலுள்ள ஆகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Knowing that this pool is mine, who are these wretches
- who have come here? What is this?" he said,
- and on the garlanded chest of the noble Aṅkataṉ
- he struck with his hand, he who was like Death himself.
What the poem says
The asura, named Tumiraṉ, claims the lake as his own and is outraged that anyone would dare camp beside it. He strikes the sleeping prince Aṅkataṉ, Vālī's son, hard on the chest.