கம்பராமாயணம் 4691 · கிட்கிந்தா 14.7

Section கிட்கிந்தா காண்டம் / 14. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மற்று அம் மைந்தனும் உறக்கம் மாறினான்
'இற்று இவன் கொல் ஆம் இலங்கை வேந்து'எனா
எற்றினானை நேர் எற்றினான் அவன்
முற்றினான் உயிர்க்கு அந்தம் முற்றினான்.

பொருள் · Meaning in Tamil

மற்று - பிறகு; அம் மைந்தனும் - வலியவனான அந்த அங்கதனும்; உறக்கம் மாறினான் - தூக்கம் கலைந்தான்; இற்று இவன் - இத்தன்மையான இவனே; இலங்கை வேந்து கொல் ஆம் எனா - இலங்கைக்கு அரசனான இராவணன் போலும் என்று கருதி; எற்றினானை - (தன்னைத்) தாக்கியவனான அந்த அசுரனை; நேர் எற்றினான் - எதிர்த்து அறைந்தான்; இகற்கு ஆதி மூர்த்தியான் அவன் - போர்த் திறத்திற்குரிய கடவுள் போன்ற அவன்; முற்றினான் - உயிர் முடிவுற்று இறந்தான்.

துமிரன் என்ற அவ் அசுரனால் அறையப்பட்ட அங்கதன், தூக்கத்திலிருந்து எழுந்து அவனை இராவணனென்று கருதி, அவனது மார்பிலறைய, அந்த அசுரன் கீழே விழுந்து இறந்தான் என்பது. போர்த்திறம் என்னும் பண்பிற்கே மூல வடிவம் போன்றவனெனத் துமிரனைக் கவிஞர் உயர்த்திக் கூறுகிறார். முற்றுதல் - ஆயுள் முடிந்து இறத்தல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Then that young hero shook off his sleep,
  2. and thinking, "Is this, then, the king of Ilaṅkai?"
  3. he struck straight back at the one who had struck him, and he,
  4. who was like the very first form of battle, came to his end.

What the poem says

Woken by the blow, Aṅkataṉ assumes his attacker must be Irāvaṇaṉ himself and hits back. The single blow kills the demon. The poet calls Tumiraṉ the embodiment of warfare, which makes Aṅkataṉ's feat all the greater.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṟṟu am maintaṉum uṟakkam māṟiṉāṉ
'iṟṟu ivaṉ kolām ilaṅkai vēntu' eṉā
eṟṟiṉāṉai nēr eṟṟiṉāṉ avaṉ
muṟṟiṉāṉ ikaṟku āti mūrttiyāṉ.