கம்பராமாயணம் 4692 · கிட்கிந்தா 14.8
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆங்கண் - அப்பொழுது; ஓர் ஓங்கல் - ஒரு மலை; இடி உண்டு இற்றது ஒத்து - இடியினால் தாக்கப்பட்டுத் தகர்ந்து விழுந்ததுபோல; அடி உண்டான் - அங்கதனால் அடியுண்ட அந்த அசுரன்; தளர்ந்து - சோர்வுற்று; அலறி வீழ்தலும் - வாய்விட்டு அலறிக் கொண்டு கீழே விழுந்ததும், பிடியுண்டார் என - பேயினால் பிடிக்கப்பட்டார் போல; துயிலும் பெற்றியார் - ஆழ்ந்த தூக்கத்திலிருந்த வானர வீரர்கள்; தொடியின் தோள் விரைந்து - வளையணிந்த தோள்களை வேகமாக வீசிக்கொண்டு; எழுந்து - எழுந்து வந்து; சுற்றினார் - (அந்த அசுரனைச்) சூழ்ந்து கொண்டார்கள்.
இடி விழுந்த மலை சரிந்து அழிவதுபோல அங்கதனால் அறையுண்ட அசுரன் தரையில் சாய்ந்து உயிரொடுங்க வானரர்கள் அப்பொழுது எழுந்த ஆரவாரத்தினால் உறக்கம் நீங்கி எழுந்து கீழே விழுந்த அந்த அசுரனைச் சூழ்ந்து கொண்டனர் என்பது. தொடியின் தோள்கள்: வளையணிந்த தோள்கள்; வீரர்கள் தம் தோள்களில் வீர வளையணிதல் மரபு. நயம்: முன்பு அந்த அசுரனை 'மலையே போல்வான்' (4595) என உவமித்ததற்கேற்ப இங்கு அவன் அங்கதனால் அடியுண்டு விழுந்ததை இடியுண்டு விழுந்த மலை என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like a mountain struck by lightning and shattered there,
- the one who took the blow collapsed and fell screaming; and at that,
- swinging their bangled shoulders they sprang up and surrounded him,
- those who had been sleeping as if seized by spirits.
What the poem says
The demon falls like a lightning-struck mountain, matching the earlier comparison of him to a mountain. The monkeys, who had slept as deeply as people possessed, wake at the noise and crowd round. Warriors wore bangles on their upper arms as a mark of valour.