கம்பராமாயணம் 4693 · கிட்கிந்தா 14.9

Section கிட்கிந்தா காண்டம் / 14. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'யார்? கொல் ஆம் இவன்; இழைத்தது என்?'எனாத்
தாரை சேயினைத் தனி வினாயினான்
மாருதேயன்; மற்று அவனும்'வாய்மை சால்
ஆரியா! தெரிந்து அறிகிலேன்'என்றான்.

பொருள் · Meaning in Tamil

மாருதேயன் - வாயுவின் மகனான அனுமன்; தாரை சேயினை - தாரையின் மகனான அங்கதனை நோக்கி; இவன் யார் கொல் ஆம் - (இறந்து கீழே விழுந்து கிடக்கும்) இவன் யார்? இழைத்தது என் - இவன் செய்தது என்ன? எனா - என்று; தனி வினாவினான் - குறிப்பிட்டுக் கேட்டான்; மற்று - பின்பு; அவனும் - அந்த அங்கதனும் (அனுமனை நோக்கி); வாய்மை சால் ஆரியா - வாய்மை நிறைந்த பெரியவனே! தெரிந்து அறிகிலேன் - நான் இவனைப் பற்றி ஒன்றும் அறியேன்; என்றான் - என்று விடை கூறினான்.

கொல் - ஐயப்பொருளையும், சால் - மிகுதிப் பொருளையும் உணர்த்திய உரிச் சொற்கள். இவன் என்பது மத்திம தீபம் இடைநிலை விளக்காய் நின்று 'யார் கொலாம்' என்பதையும், 'இழைத்ததென்' என்பதையும் தழுவியது. மாருதேயன்: மருத்தின் புதல்வன் - தத்திதாந்தப் பெயர். வாய்மை, கல்வி முதலியவற்றாலும் ஒழுக்கத்தாலும் சிறந்தவனாதலால் அனுமனை அங்கதன் 'ஆரியா' என்று விளித்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Who could this be? What has he done?" so
  2. Māruti asked Tārai's son directly;
  3. and he replied, "O noble one, full of truth,
  4. I do not know anything about him."

What the poem says

Aṉumaṉ asks Aṅkataṉ, son of Tārai, who the fallen creature was. Aṅkataṉ, who struck in his sleep, has no idea. He addresses Aṉumaṉ respectfully as "noble one" because of his truthfulness, learning and conduct.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'yār? kolām ivaṉ; iḻaittatu eṉ?' eṉāt
tārai cēyiṉait taṉi viṉāviṉāṉ
mārutēyaṉ; maṟṟu avaṉum 'vāymai cāl
āriyā! terintu aṟikilēṉ' eṉṟāṉ.