கம்பராமாயணம் 4694 · கிட்கிந்தா 14.10

Section கிட்கிந்தா காண்டம் / 14. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(அது கேட்டுச்) சாம்பன் - (அனுமனை நோக்கி) கரடிகளுக்குத் தலைவனான சாம்பவான்; யான் இவன்தனை - நான் இந்த அசுரனைக் குறித்து; தெரிய எண்ணினேன் - இன்னானென்று தெரிந்து கொள்ளும்படி நினைத்துப் பார்த்தேன்; தூ நிவந்த வேல் - பகைவரது புலால் நிறைந்த வேற்படையைத் தாங்கியுள்ள; துமிரன் என்னும் பேரான் - துமிரன் என்னும் பெயரையுடையவன்; இவ் ஆழ்புனல் பொய்கை ஆளும் - ஆழ்ந்த நீரையுடைய இந்தப் பொய்கையை ஆட்சி செய்கின்ற; ஓர் தானவன் - ஓர் அசுரனாவான்; எனச் சாற்றினான் - என்று கூறினான்.

திருமாலின் திரிவிக்கிரமாவதார காலத்தில் அவன் திருவடிகள் உலகில் பரவியதைக் காணுமாறு சாம்பவான் பலமுறை பூமியை வலம் வந்தவனாதலால் உலகத்திலுள்ள பல செய்திகளைத் தெரிந்திருத்தல் பற்றி அவன் இந்த அசுரனைக் குறித்து இன்னானென்று வினவியறிந்திருந்தான் என்பது. தூ நிவந்த வேல்: துமிரனது வேலின் வெற்றிச் சிறப்பைக் கூறுவது. தூ - புலால். அங்கதன் இத் துமிரன் என்னும் அசுரனைக் கொன்ற செய்தி வானரர் பிலம் புகுவதற்குமுன் நிகழ்ந்ததாகக் கூறும் வான்மீகம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "I have thought about who this is, so as to know him:
  2. bearing a spear thick with flesh, he goes by the name
  3. of Tumiraṉ; he is an asura who rules
  4. this pool of deep water," so Cāmpaṉ declared.

What the poem says

Cāmpaṉ, the aged king of the bears, answers Aṉumaṉ's question. He has travelled round the earth many times, ever since he circled it to watch Viṣṇu's stride spread over the world, so he knows such things. The spear "thick with flesh" marks the asura's many victories.

In Vālmīki's version Aṅkataṉ kills this demon before the monkeys enter the cave.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'yāṉ ivaṉtaṉait teriya eṇṇiṉēṉ
tū nivanta vēl tumiraṉ eṉṉum pē
rāṉ; iv āḻ puṉal poykai āḷum ōr
tāṉavaṉ' eṉac cāmpaṉ cāṟṟiṉāṉ.