கம்பராமாயணம் 4695 · கிட்கிந்தா 14.11
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வேறும் - இவ் வசுரனையல்லாமல் வேறு சிலரும்; எய்துவார் உளர்கொல் ஆம் எனா - இங்கு போருக்கு வரக் கூடியவர் இருக்கிறார்களோ என்று கருதி; இன்துயில் செலவு தீர்ந்துள்ளார் - (தமது) இனிய தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து (அவ்வாறு வருபவர்களைச் சிறிதுநேரம் எதிர்நோக்கின் பின்பு); தேறி - இனி எவரும் வாரார் எனத் தெளிந்து; வீறு செஞ்சுடர்க் கடவுள் - பெருமை மிக்க சிவந்த கதிர்களையுடைய சூரியன்; வேலை வாய் நாற - கிழக்குக் கடலிடத்துத் தோன்ற; நாள் மலர்ப் பெண்ணை - புதிதாய் மலர்ந்த மலர்கள் நிறைந்த பெண்ணையாற்றை, நாடுவார் - நோக்கிச் சென்றனர்.
வானரவீரர் 'இன்னும் இவன்போன்ற அசுரர் வேறு யாரேனும் போருக்கு வரக் கூடும்' என்று கருதித் தூங்காமல் விழித்திருந்து எதிர்பார்த்த பின்பு, சூரியன் உதிக்கும் வேளையில் சீதையைத் தேடுமாறு அங்கிருந்து புறப்பட்டுப் பெண்ணையாற்றை அடைந்தனர். வேறும் - எச்சவும்மை. வீறு: பிறர்க்கு இல்லாத தனிப் பொலிவு. நாறுதல்: தோன்றுதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Wondering, "Are there others who might come as well?"
- they gave up their sweet sleep; then, reassured,
- as the god of glorious red rays appeared over the sea,
- they set off toward the Peṇṇai, with its freshly opened flowers.
What the poem says
The monkeys stay awake for a while in case more attackers come. When none appear, they set out at sunrise, as the sun rises over the eastern sea, and head for the river Peṇṇai.