கம்பராமாயணம் 4696 · கிட்கிந்தா 14.12

Section கிட்கிந்தா காண்டம் / 14. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1புள் நை வெம் முலைப் புளினம் ஏய் தடம் அத்து
உண்ண ஆம்பல் இன் அமுதம் ஊறு வாய்
வண்ண வெள் நகைத் தரள வாள் முகப்
பெண்ணை நண்ணினார் பெண்ணை நாடுவார்.

பொருள் · Meaning in Tamil

பெண்ணை நாடுவார் - சீதையைத் தேடிச் சென்ற அவ்வானர வீரர்கள்; புள் நை - சக்கரவாகப் பறவைகள் (ஒப்பாகாமல்) வருந்துவதற்குக் காரணமான; புளின வெம்முலை - மணற்குன்றுகளாகிய விரும்பத்தக்க முலைகளையும்; தடத்து ஏய் ஆம்பல் - நீர் நிலையில் பொருந்திய செவ்வாம்பல் மலராகிய; உண்ண இன் அமிழ்து ஊறுவாய் - பருகுமிடத்து இனிய அமிழ்தம் சுரக்கின்ற வாயையும்; தரளம் - முத்துக்களாகிய; வண்ண வெண் நகை - அழகான ஒளிமிக்க பற்களையும்; வாள்முகம் - ஒளி பொருந்திய (தாமரை மலர்களாகிய) முகத்தையுமுடைய; பெண்ணை - பெண்ணை நதியாகிய ஒரு பெண்ணை; நண்ணினார் - சென்று சேர்ந்தார்கள்.

பெண்ணை நதியை ஒரு பெண்ணாக உருவகப்படுத்தினார். பெண்ணை: நதி, பெண்; இச் சொல் நதியைக் குறிக்கும்போது இரண்டாம் வேற்றுமைத் தொகையாகவும் (பெண்ணை - பெண்ணையை), மற்றொரு பொருளான பெண்ணைக் குறிக்கும்போது இரண்டாம் வேற்றுமை விரியாகவும் (பெண் - ஐ) கொள்ள வேண்டும். பெண்ணை நதி: மணற்குன்றுகள், செவ்வாம்பல், முத்துக்கள், தாமரை. பெண்: முலைகள், வாய், பற்கள், முகம். சிலேடையணியை அங்கமாகக் கொண்டுவந்த இயைபுருவகவணி. உவமையாவதற்குரிய சக்கரவாகப் பறவையை உவமேயமாகிய முலைகளிலும் தாழ்த்திக் கூறியது எதிர்நிலையணி. முலைகளுக்குப் புளினம் உயர்ச்சியில் உவமையாம். நயம்: பெண்ணை நாடுவோர் பெண்ணை நண்ணினார். இதில் பெண்ணை என்ற சொல் இரட்டுற மொழிதலாக ஒரு பெண்ணுக்கும் பெண்ணையென்னும் நதிக்கும் அமைத்த நயம்காணத்தக்கது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Her desirable breasts are the sandbanks that make the cakravāka birds grieve; in her pools
  2. the water-lily is a mouth that wells with sweet nectar to drink;
  3. her lovely white smile is pearls, her face bright as a sword:
  4. those seeking the woman reached the Peṇṇai.

What the poem says

The river Peṇṇai is pictured as a beautiful woman: her sandbanks are breasts that outdo the paired cakravāka birds poets usually compare to breasts, red water-lilies are her lips, pearls her teeth, lotuses her face. The last line is a pun: the searchers looking for a woman, Cītai, arrive at Peṇṇai, whose name also suggests "woman."

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1puṉ nai vem mulaip puḷiṉam ēy taṭattu
uṇṇa āmpal iṉ amiḻtam ūṟu vāy
vaṇṇa veṇ nakait taraḷa vāḷ mukap
peṇṇai naṇṇiṉār peṇṇai nāṭuvār.