கம்பராமாயணம் 4696a · கிட்கிந்தா 14.13
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அறிவின் நீடினார் - அறிவின் எல்லைகளைக் கண்டவர்களான அவ் வானர வீரர்; துறையும் - (அந்த நதியின்) இறங்கு துறைகளிலும்; தோகை நின்று ஆடு சூழலும் - மயில்கள் (களிப்போடு) நின்று கூத்தாடுகின்ற இடங்களிலும்; குறையும் - அந்த ஆற்றின் இடையே இருந்த திட்டுக்களிலும்; சோலையும் - அந்த ஆற்றையடுத்த பூஞ்சோலைகளிலும், குளிர்ந்த சாரல் நீர்ச் சிறையும் - குளிர்ந்த காற்று வீசும் பக்கங்களிலமைந்த நீர்நிலைகளான ஏரி குளங்களிலும், தெள்ளு பூந் தடமும் - தெளிவான மலர்கள் நிறைந்த தடாகங்களிலும்; தெண் பளிக்கு அறையும் - ஒளியுடன் விளங்கிய பளிங்குப் பாறைகளிலும்; தேடினார் - சீதையைத் தேடினார்கள்.
தோகை: சினையாகுபெயராய் மயிலைக் குறித்தது. குறை: ஆற்றிடைத் திட்டு (தீவு).
ஆங்கிலம் · English translationAI
Translation
- The bathing ghats, the groves where peacocks stand and dance,
- the islets in the stream, the gardens, the pools of water
- held in the cool hillsides, the clear flowering ponds, the bright crystal
- rocks: all these they searched, those far advanced in wisdom.
What the poem says
The monkeys comb every corner of the riverside country for Cītai: bathing steps, peacock groves, river islands, gardens, lakes and crystal boulders. The "tail-feather" word for peacock is a part standing for the whole bird.