கம்பராமாயணம் 4696b · கிட்கிந்தா 14.14

Section கிட்கிந்தா காண்டம் / 14. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அணி கொழித்து வந்து - அழகாக அலை வீசிக் கொண்டு வந்தும்; ஆடுவார் எவரும் - (தன்னிடம்) மூழ்கினார் எவராயினும், பிணி கொழித்து - நோய்கள் நிறைந்த; வெம் பிறவி வேரின் வன்துணி கொழித்து - கொடிய பிறப்புக்களினுடைய வேர்கள் (வினை) வலிய துண்டுகளையடித்துக் கொண்டும்; அருஞ் சுழிகள் தோறும் - (தப்புவதற்கு அரிய) தன் நீர்ச் சுழிகளிலெல்லாம்; நல் மணி கொழிப்பதன் - சிறந்த இரத்தினங்களை வாரிக் கொண்டும் வருகின்ற பெண்ணை நதியின்; துறையின் வைகினார் - ஒரு துறையில் (வானர வீரர்) தங்கியிருந்தார்கள்.

தன்னில் மூழ்கியவர் எந்த அளவு பாவியராயிருப்பினும் அவர்களது பிறவிக்குக் காரணமான பாவங்களையெல்லாம் போக்கி, அவர்களுக்கு முத்தியளிக்க வல்ல பெருமையுள்ளதும், நீர்ச் சுழிகளில் இரத்தினங்களை வாரிக்கொண்டு வரும் வளமுள்ளதுமான பெண்ணை நதியின் தென்கரையை அடைந்து வானர வீரர்கள் தங்கினார்கள் என்பது. பிறவிவேர் - பிறப்புக்குக் காரணமான வினைகள். 'கொழித்தல்' என்னும் வினைச் சொல் வெவ்வேறு பொருளில் பலமுறை வந்தது: சொற்பின்வருநிலையணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Coming on, tossing up beauty as it flows, and for all who bathe in it
  2. washing away their ills, washing away the hard chunks
  3. of the roots of cruel rebirth, and in every whirlpool hard to escape
  4. casting up fine gems: at a ghat of that river they rested.

What the poem says

The Peṇṇai is praised as a sacred river: whoever bathes in it, however sinful, is cleansed of the karma that causes rebirth and can reach liberation. Its eddies also throw up precious stones. The same verb, "to sift or wash up," is used again and again in different senses, a deliberate figure of repetition.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṇi koḻittu vantu, evarum āṭuvār
piṇi koḻittu, vem piṟavi vēriṉ vaṉ
tuṇi koḻittu, aruñ cuḻikaḷtōṟum, nal
maṇi koḻippataṉ tuṟaiyiṉ vaikiṉār.