கம்பராமாயணம் 4696c · கிட்கிந்தா 14.15

Section கிட்கிந்தா காண்டம் / 14. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நாடு நண்ணினார் - (சீதையைத்) தேடுவதை மேற்கொண்ட அவ் வானர வீரர்கள்; நீர் ஆடு பெண்ணை ஆறும் ஏறினார் - யாவரும் வந்து நீராடும் பெண்ணை நதியைக் கடந்தனர்; காடு நண்ணினார் - பல காடுகளையடைந்தனர்; மலை கடந்து உளார் - பல மலைகளைத் தாண்டிச் சென்றனர்; வீடு நண்ணினார் என்ன - முத்தி உலகத்தை யடைந்தவர்களே போல; வீசும் நீர் - அலை வீசும் நீர்வளத்தால் சிறந்த; நாடு நண்ணினார் - தசநவ நாட்டையணுகினார்கள்.

வானரர்கள் பல காடுகளிலும், மலைகளிலும் அலைந்து திரிந்து இறுதியில் நீர்வளமுள்ள தசநவ நாட்டையடைந்ததற்குப் பல பிறவிகளில் அலைந்து திரிந்தவன் இறுதியில் முத்தியுலகத்தையடைவதை உவமை கூறினார். நாடு - பிந்தியது: முதனிலைத் தொழிற்பெயர். நாடு நண்ணினார் நாடு நண்ணினார் - மடக்கணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They crossed the Peṇṇai river where people bathe;
  2. they reached forests; they crossed mountains;
  3. like those who reach final liberation, the searchers
  4. reached a land rich in tossing waters.

What the poem says

After long wandering through forests and hills, the monkeys reach the well-watered country of Tacanavam. The poet compares this to a soul that wanders through many births before reaching liberation. The repeated phrase "nāṭu naṇṇiṉār," used first as "those who search" and then as "reached the land," is a verbal play on identical words.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṭu peṇṇai nīr āṟum ēṟiṉār;
kāṭu naṇṇiṉār; malai kaṭantuḷār;
vīṭu naṇṇiṉār eṉṉa, vīcum nīr
nāṭu naṇṇiṉār nāṭu naṇṇiṉār.