கம்பராமாயணம் 4696d · கிட்கிந்தா 14.16
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தசநவப் பெயர் - (அந்த வானர வீரர்கள்) தசநவம் என்ற பெயரையுடைய; சரள சண்பகத்து - இனிய சண்பக மரங்களையுடையதும்; அசந அப்புலத்து அகணி - உணவையுண்டாக்கும் அழகிய விளை நிலங்களைக் கொண்ட மருத நிலங்களையுடையதுமாகிய; நாடு ஒரீஇ - வளநாட்டை விட்டு நீங்கி; உசநவப் பெயர்க் கவி உதித்த - உசுநஸ் என்னும் பெயரையுடைய சுக்கிரீவன் பிறந்த; பேர் இசை விதர்ப்ப நாடு - பெரும்புகழ் வாய்ந்த விதர்ப்பம் என்னும் நாட்டை; எளிதின் எய்தினார் - எளிதாகச் சென்று சேர்ந்தார்கள்.
தச நவம் (தசார்ணவம்) என்னும் நாடு சண்பகமரத் தொகுதிகளையும், நல்ல விளைச்சலைக் கொண்ட புலங்களையுமுடையது என்பது. சரளம்: இனிமை. அகணி: மருதநிலம். ஒருவி என்ற வினையெச்சம் திரிந்து அளபெடுத்தது. ஒரீஇ - சொல்லிசையளபெடை. உசநவன்: சுக்கிரீவன் பெயர்களுள் ஒன்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The land named Tacanavam, with its sweet campaka trees
- and its lovely fields of the fertile plain that yield food, they left behind,
- and the land of Vidarbha, of great fame, where was born
- the monkey who bears the name Ucanavaṉ, they reached with ease.
What the poem says
The searchers pass through Tacanavam, rich in campaka trees and paddy fields, and come easily into Vidarbha. The commentary explains that Ucanavaṉ is one of the names of Cukkirīvaṉ, so Vidarbha is honoured here as his birthplace.