கம்பராமாயணம் 4696e · கிட்கிந்தா 14.17

Section கிட்கிந்தா காண்டம் / 14. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வைதருப்ப மண்டலனில் - (வானர வீரர்கள்) விதர்ப்பம் என்னும் நாட்டில்; வந்து புக்கு - வந்து சேர்ந்து; எய்து அருப்பம் அத்தனையும் - (அந்த நாட்டில்) பொருந்தின ஊர்கள் எல்லாவற்றையும்; எய்தினார் - அடைந்தனர்; பெய் தருப்பை நூல் - பூண்டுள்ள தருப்பைகளினாலும், (மார்பிலணிந்துள்ள) பூணூலினாலும்; பிறழும் மேனியார் - விளங்கும் உடம்பையுடையவர்களாகிய; செய் தவத்துளார் வடிவின் - தவம் செய்யும் முனிவரது வடிவைக் கொண்டு, தேடினார் - சீதையைத் தேடினார்கள்.

விதர்ப்ப நாட்டையடைந்த வானர வீரர்கள் முனிவரது வடிவுகொண்டு அங்குள்ள ஓரூரையும்விடாது புகுந்து சென்று சீதையைத் தேடினார்கள் என்பது. மனிதர்கள் வாழும் ஊர்களில் சென்று வானர வடிவுடன் தேடுதல் இயலாதாகையால் விரும்பும் உருவம் கொள்ளும் அவ் வானர வீரர் விதர்ப்ப நாட்டு ஊர்களில் சென்று தேடுகையில் சிறப்பு மிக்கதாய், ஐயத்திற்குச் சிறிதும் இடந்தராத முனிவரது வடிவைக் கொண்டனர் என்பது அறியத் தக்கது. வைதருப்பம்: தத்திதாந்த நாமம். தருப்பை - தருப்பைப் புல்லால் திரித்த ஒரு கயிறு; இது முஞ்சி எனப்படும். அந்தணப் பிரமசாரிகள் முஞ்சியும் பூணூலும் தரிப்பர். மண்டலம் - மண்டலன் (மண்தலன்) - ஈற்றுப்போலி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Coming into the region of Vidarbha,
  2. they reached every one of the towns that lay there;
  3. with bodies bright with the sacred grass cord and thread they wore,
  4. in the form of those who practise austerities, they searched.

What the poem says

Monkeys could not search human towns openly, so these shape-changers disguise themselves as ascetics, wearing the sacred thread and a cord of darbha grass, a form no one would suspect. In this guise they go through every town in Vidarbha looking for Cītai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaitaruppa maṇṭalaṉil vantu pukku,
eytu aruppam attaṉaiyum eytiṉār;
pey taruppai nūl piṟaḻum mēṉiyār,
cey tavattuḷār vaṭiviṉ, tēṭiṉār.