கம்பராமாயணம் 4696f · கிட்கிந்தா 14.18
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அறிஞர் - அறிவாளர்களான அந்த வானர வீரர்; அன்ன தன்மையால் - அவ்விதமாக; நாடி - சீதையை அங்கே தேடிப் பார்த்து; அச் செந்நெல் வேலி சூழ் - செந்நெற் பயிர்கள் விளையும் வயல்கள் சூழ்ந்த; திரு நல் நாடு ஒரீஇ - சிறந்த அழகான அந்த விதர்ப்ப நாட்டை விட்டு நீங்கி; தன்னை எண்ணும் - சீவான்மாவாகிய உயிரின் இயல்பை அறிந்திருக்கின்ற; அத்தகை புகுந்துளார் - அத் தன்மை பொருந்தியவரான முனிவர்கள்; துன்னு தண்டகம் - நிறைந்து வாழும் தண்டகாரணியத்தை; கடிது துன்னினார் - விரைவாகச் சென்று சேர்ந்தார்கள்.
தன்னையெண்ணும் அத்தகை புகுந்துளார்: சீவான்ம சொரூபத்தை உள்ளபடியுணர்ந்து காணவல்ல யோகியர். திருநல்நாடு: கண்டார் தங்கியிருந்து வாழ விரும்பும் அழகியநாடு. தண்டக வனம்: இட்சுவாகு வம்சத்தில் தோன்றித் தன் தீய நடத்தையால் நாடு கடத்தப் பெற்ற தண்டகன் என்னும் அரசகுமாரனால் தெற்கே அமைக்கப்பெற்று ஆளப்பெற்றதும், பின்பு சுக்கிராச்சாரியார் சாபத்தால் கொடிய வனமானதும் பல முனிவர்கள் தவ நியமத்தில் வாழ்ந்து வந்ததுமான ஓர் இடம். இவ் வனத்திலேதான் இராமன் சீதையோடும், இலக்குவனோடும் பல ஆண்டுகள் தங்கியிருந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In that manner the wise ones searched, and leaving
- that fair, good land ringed with fields of red paddy,
- they swiftly reached the Taṇṭaka forest, thronged
- by those who have entered the state of knowing the self.
What the poem says
Having searched Vidarbha without success, the monkeys hurry into the Daṇḍaka forest, home of sages who have realised the true nature of the self. The commentary recalls that the forest was once a kingdom founded by Daṇḍaka, an exiled prince of Irāmaṉ's own Ikṣvāku line, and turned wild by the curse of the sage Śukra. It is also where Irāmaṉ lived with Cītai and Ilakkuvaṉ for many years.