கம்பராமாயணம் 4696g · கிட்கிந்தா 14.19

Section கிட்கிந்தா காண்டம் / 14. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உண்டு அகத்துள் ஆர் உறையும் - புலன்களைத் துய்த்துக் கொண்டு உடம்பினுள் பொருந்தி வசிக்கின்ற; ஐம் பொறிக் கண்டகர்க்கு - ஐந்து இந்திரிய உணர்ச்சிகளாகிய (முள் போன்ற) கொடியவர்களுக்கு; அருங் காலன் ஆயினார் - கொடிய யமன் போன்றவர்களாகிய முனிவர்கள் வசிக்கின்ற; தண்டகத்தையும் தடவி - அந்தத் தண்டக வனத்தையும் தேடிப் பார்த்து; ஏகினார் - (அங்கும் சீதையைக் காணாமல்) அந்த இடத்தை விட்டு நீங்கிய அவ் வானர வீரர்கள்; முண்டகத் துறை - முண்டகத் துறையென்னும் இடத்தை, கடிது முற்றினார் - விரைவாகச் சென்று சேர்ந்தார்கள்.

ஐம்பொறிகள், ஆன்மாவை நற்கதியில் சேரவொட்டாது துன்புறுத்துவதால் அவற்றைக் 'கண்டகர்' என்றார். கண்டகர்: முள்போன்ற கொடியோர். ஐம்பொறிக் கண்டகர்க்கு அருங்காலனாயினார்: ஐம்பொறிகளுக்குக் கூற்றுவன் ஆனவர். அஃதாவது, மனத்தை நல்வழியிற் செல்லவொட்டாது தடுத்து ஐம்புலன்களிற் செல்லுமாறு இழுக்கின்ற ஐம்பொறிகளை அவ்வாறு செய்யவொட்டாது தடுத்துத் தம் வசமாக்கி மனத்தைச் சீவான்மா பரமான்மா தியானங்களில் செலுத்தும் வல்லமையுடையவர் ஜிதேந்திரியர் எனப்படுவர். முண்டகத் துறை: தாமரை முதலிய பூக்கள் நிறைந்து விளங்கும் நீர்த் துறையையுடைய ஒருசூழல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Through the Taṇṭaka too, home of those who had become a dread Death
  2. to the five senses, thorns that dwell within the body
  3. and feed on pleasures, they groped their way and went on,
  4. and swiftly reached the lotus ghat of Muṇṭakam.

What the poem says

The sages of the Daṇḍaka have mastered the five senses, which the poet calls thorns that drag the mind toward pleasure and keep the soul from liberation; such sages are a "death" to them. Finding no trace of Cītai, the monkeys move on to Muṇṭakattuṟai, a place of lotus-filled waters.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uṇṭu, akattuḷār uṟaiyum aim poṟik
kaṇṭakarkku aruṅ kālaṉ āyiṉār,
taṇṭakattaiyum taṭavi ēkiṉār;
muṇṭakattuṟai kaṭitu muṟṟiṉār.