கம்பராமாயணம் 4696h · கிட்கிந்தா 14.20

Section கிட்கிந்தா காண்டம் / 14. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அள்ளல் நீர் எலாம் - (அந்த முண்டகத் துறையில்) சேற்றோடு கலந்த நீரெல்லாம்; அமரர் மாதரார் - அங்கு வந்து நீராடும் தேவ மாதர்களின்; கொள்ளை மா முலை - மிகப் பெரிய முலைகளில் பூசப்பட்ட; கலவை - மிகுதியான கலவைச் சாந்தும் கலத்தலால்; கோதையின் கள்ளு நாறலின் - மலர் மாலைகளும் நறுமணம் கமழப் பெற்றமையால்; கமல வேலி வாழ் - அந்த முண்டகத் துறையில் வசித்துவந்த; புள்ளும் - பறவைகளும்; புலவு தீர்தலால் - (மீன்களின் மேலுள்ள) புலால் நாற்றம் நீங்கியதால்; மீன் உணா - அம்மீன்களைப் புசிப்பதில்லை.

அந்த முண்டகத் துறையில் வந்து நீராடுகின்ற தேவமாதர்களின் முலைகளில் பூசியிருந்த கலவைச் சந்தனமும், மலர் மாலைகளும் அந்நீர்த் துறையில்படிதலால், அங்குள்ள மீன்களும் அந்தக் கலவை, மலர்களின் நறுமணத்தை அடைந்து தமது புலால் வாசனை நீங்கப் பெறுகின்றன. அதனால் அங்கு வாழும் நாரை முதலிய நீர்ப் பறவைகள் புலால் மணம் கமழாத அம் மீன்களை உண்ணமாட்டா என்பது. அம் முண்டகத்துறை திரள்திரளாகத் தேவமாதர் பலர் வந்து படியப் பெற்ற சிறப்பு வாய்ந்தது. கொள்ளை - மிகுதி; கமலவேலி - முண்டகத்துறை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. All the muddy water there is fragrant with the sandal paste
  2. on the full great breasts of the women of the gods,
  3. and with the honey of their garlands, so the birds that live by the lotus pools
  4. do not eat the fish, since their smell of flesh is gone.

What the poem says

A playful exaggeration describing Muṇṭakattuṟai: celestial women bathe there in such numbers that their sandal paste and flower garlands perfume the water. The fish lose their fishy smell, and so the herons and other water birds no longer find them worth eating.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aḷḷal nīr elām, amarar mātarār,
koḷḷai mā mulaik kalavai, kōtaiyiṉ
kaḷḷu, nāṟaliṉ, kamala vēli vāḻ
puḷḷum, mīṉ uṇā, pulavu tīrtalāl;