கம்பராமாயணம் 4696i · கிட்கிந்தா 14.21
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
விஞ்சை மன்னர்பால் - வித்தியாதர மன்னரிடத்து; விரக மங்கைமார் - தாம் கொண்ட பிரிவுத் துயரால் வேதனைப்படுகின்ற வித்தியாதர மகளிர்; வீணையின் நடத்து - வீணைகளைக் கொண்டு பிறர் பாடும்; பாடலான் - இசைப் பாட்டினால்; நஞ்சு அஞ்சுவார் - மனம் நைந்து நடுங்குவார்கள்; கண்நீர் அருவி ஆறு - (அவ்வாறு நடுங்குவதால் அவர்கள் சொரியும்) கண்ணீர்அருவிபோல் பெருகும் ஆற்றில்; குஞ்சரம் குடைந்து - யானைகள் அமிழ்ந்துமூழ்கி; ஒழுகும் கொட்பு அது - நீராடும் தன்மையுடையது (அந்த முண்டகத்துறை).
ஆல், அரோ: ஈற்றசை. தத்தம் கணவரைப் பிரிந்த வித்தியாதர மகளிர், தம்மைப் போலப் பிரிவில்லாத மகளிர் மனக் கிளர்ச்சியோடு வீணைகளைக் கொண்டு பாடும் பாடலைக் கேட்டு வருந்தி விரக வேதனையுற்று மனம் நடுங்கிக் கண்ணீர் சிந்துவார்கள்; அக் கண்ணீர்ப் பெருக்கு யானைகளும் அமிழ்ந்து மூழ்கும் பெரிய நீர்ப் பெருக்காகும் என்பது. தொடர்புயர்வு நவிற்சியணி. விஞ்சை மன்னர்: காமநூல்களைக் கற்றுத் தேர்ந்த வித்தியாதர ஆடவர். கணீர் - இடைக்குறை (கண்ணீர்).
ஆங்கிலம் · English translationAI
Translation
- Elephants plunge and bathe in it and are borne along;
- for the women pining for the Vidyādhara lords,
- hearing the songs played on the vīṇā, melt and tremble,
- and their tears become a river, a waterfall, indeed!
What the poem says
More hyperbole about this place. Vidyādhara women separated from their husbands hear others singing to the vīṇā and are overcome with longing; their tears swell into a river deep enough for elephants to bathe in. The Vidyādharas are a race of semi-divine beings, said here to be versed in the arts of love.