கம்பராமாயணம் 4696j · கிட்கிந்தா 14.22

Section கிட்கிந்தா காண்டம் / 14. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

குமுத வாயினார் - செவ்வாம்பல் மலர் போன்ற வாயையுடையவர்களும்; குயிலை ஏசுவார் - (தமது குரலால்) குயிலைப் பழிப்பவர்களும்; சமுக வாளியும் - கூட்டமான அம்புகள் போன்ற கண்களையும்; தனுவும் - வில்லைப் போன்ற புருவங்களையும் கொண்ட, வாள் முகத்து - ஒளி பொருந்திய முகங்களையுடைய அமுத பாடலார் - அமிழ்தம் போன்ற இனிய பாடல்களைப் பாடுகின்றவர்களான மகளிர்; கமுக வார் நெடுங் கனக ஊசலில் - பாக்கு மரங்களில் கட்டப்பட்ட நீண்ட பொன்னூஞ்சல்களில்; மருவி ஆடுவார் - பொருந்தி ஆடி மகிழ்வார்கள்.

அங்கே பாக்குமரங்களில் கட்டப்பட்டுள்ள பொன்னூஞ்சல்களில் மகளிர் மனமகிழ்ந்து ஆடுவாரென அந்த இடத்தின் அமைதியான சூழல் வருணிக்கப் பெற்றது. தனு: மகளிர் புருவத்திற்கு வடிவம் தொழிலும் பற்றிய உவமை. வாளி, தனு: உவமவாகு பெயர்கள். உருவக உயர்வுநவிற்சியணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. On long golden swings hung from tall areca palms
  2. women with lily-red mouths, who put the cuckoo to shame,
  3. with eyes like a host of arrows and brows like bows, with bright faces,
  4. singers of nectar-sweet songs, swing and play.

What the poem says

The pleasant life of the place is shown through women swinging on golden swings tied to areca palms, singing in voices sweeter than the cuckoo's. Their eyes are compared to arrows and their brows to bows, both in shape and in the way they wound.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kamuka vār neṭuṅ kaṉaka ūcalil,
kumuta vāyiṉār kuyilai ēcuvār;
camuka vāḷiyum, taṉuvum vāḷ mukattu
amuta pāṭalār maruvi āṭuvār.