கம்பராமாயணம் 4712 · கிட்கிந்தா 15.16

Section கிட்கிந்தா காண்டம் / 15. சம்பாதிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பொருப்பு உறழ் - மலையையொத்த; வயிரத் திண் தோள் - உறுதியான வலிய தோள்களையுடைய; பொரு சினத்து ஆளி போல்வான் - போர் புரியும் கடுங்கோபத்தைக் கொண்ட சிங்கம் போன்றவனாகிய அங்கதன்; தரிப்பு இலாது - மனம்பொறாமல்; உரைத்த மாற்றம் - சொன்ன சொற்கள்; தடுப்ப அருந் தகைத்ததாய - தடுக்க முடியாத தன்மை பொருந்திய; நெருப்பையே விளைத்த போல - பெருந்தீயை மூட்டியது போல; நெஞ்சமும் மறுக - மனத்தையும் கலங்கச் செய்ய; கேட்டு - (அதனைக்) கேட்டு; எண்கின் வேந்தன் - கரடிகளின் அரசனான சாம்பவான்; விருப்பினால் அவனை நோக்கி - அன்போடு அந்த அங்கதனைப் பார்த்து; விளம்பினன் - கூறலானான்.

யாளி என்பது ஆளி என்றாயிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the one like a fighting, raging lion, whose shoulders are strong as diamond and like mountains,
  2. spoke those words, unable to bear his grief, and they were like
  3. a fire kindled that none could stop, the king of the bears heard them
  4. with his heart in turmoil, and looking at him with love, he spoke.

What the poem says

Aṅkataṉ's words strike the assembly like an uncontrollable fire. Cāmpaṉ, king of the bears, troubled but full of affection for the young prince, answers him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poruppu uṟaḻ vayirat tiṇ tōḷ poru ciṉattu āḷi pōlvāṉ,
tarippu ilātu uraitta māṟṟam, taṭuppa aruntakaittatu āya
neruppaiyē viḷaitta pōla, neñcamum maṟukak kēṭṭu,
viruppiṉāl avaṉai nōkki, viḷampiṉaṉ eṇkiṉ vēntaṉ.