கம்பராமாயணம் 4713 · கிட்கிந்தா 15.17

Section கிட்கிந்தா காண்டம் / 15. சம்பாதிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நீயும் நின் தாதையும் நீங்க நின் குலத்
தாயம் வந்தவர்க்கு ஒரு தனையர் இல்லையால்;
ஆயது கருதினம்; அன்னது அன்று எனின்
நாயகர் இறுதியும் நவிலற் பாலதோ?

பொருள் · Meaning in Tamil

நீயும் நின் தாதையும் நீங்க - நீயும் உன் தந்தையான சுக்கிரீவனும் தவிர; நின்குலத் தாயம் வந்தவரொடும் - உன் குலத்தில் உரிமையுடையவராய்ப் பிறந்தவர்க்கு; தனையர் இல்லை - வேறு ஒரு மகன் இல்லை; ஆயது கருதினம் - (அது கருதியே) நீ உயிர் நீங்காது சுக்கிரீவனைச் சேர்க என்று கூறினோம்; அன்னது அன்று எனில் - அவ்வாறு இல்லாவிட்டாலும்; நாயகர் இறுதியும் - (நம்) தலைவர்களின் மரணமும்; நவிலற் பாலதோ - (நாம்) பேசத் தக்கது ஆகுமோ? (தகாது).

உங்கள் அரச மரபில் இப்போது வேறு புதல்வர் இல்லாததாலும், எங்களைப் போன்ற எளியவரது மரணமின்றி உங்களைப் போன்ற இளவரசர் மரணம் குறித்து வாயினாற் சொல்லுதலும் கூடாதாதலாலும் நீ உயிர்விடுவேன் என்று கூறுவது சிறிதும் தகாது; ஆதலால் நாங்களெல்லாரும் உயிர் நீங்க, நீ சுக்கிரீவனைச் சென்று சேர்வாய் என்பது. தாயம்: சொத்திலுள்ள உரிமை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Apart from you and your father, among those
  2. who have come into the inheritance of your line there is no other son;
  3. that is what we had in mind; and even if it were not so,
  4. is the death of our lords something even to be spoken of?"

What the poem says

Cāmpaṉ explains: Aṅkataṉ and Cukkirīvaṉ are the only heirs of the royal line, so Aṅkataṉ must not die. And quite apart from that, it is not fitting for humble followers even to speak of their prince's death.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nīyum niṉ tātaiyum nīṅka niṉ kulat
tāyam vantavaroṭum taṉaiyar illaiyāl;
āyatu karutiṉam; aṉṉatu aṉṟu eṉiṉ
nāyakar iṟutiyum navilaṟpālatō?