கம்பராமாயணம் 4790 · சுந்தர 2.2
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(அனுமன்) இலங்கை மூதூர் - பழைமையான இலங்கை நகரின்; கடிபொழில் - காவற் சோலைகளையும், கனக நாஞ்சில் - பொன்னாற் செய்த குருவித் தலையையும்; மண்டலமதிலும் - வட்டமான மதிலையும்; கொற்ற வாயிலும் - வெற்றியை அறிவிக்கும் கோபுர வாயிலையும்; மணியின் செய்த வெண்தள - மணிகள் பதிக்கப் பெற்ற வெண்மையான; களப மாட வீதியும் - சுண்ணம் பூசப்பெற்ற, மாளிகைகளை உடைய வீதியையும்; பிறவும் எல்லாம் - (கூறப்பெறாது விடுத்த) பிறவற்றையும்; கண்டனன் - பார்த்தான்; அண்டமும் - வானத்தின் உச்சியும்; திசைகள் எட்டும் - எட்டுத் திக்குகளும்; அதிர - எதிரொலிக்க; தோள் கொட்டி ஆர்த்தான் - தோள்களைப் புடைத்து ஆரவாரித்தான்.
அனுமன் இலங்கைமூதூரின் காவற்சோலை முதலியவற்றைப் பார்த்து மகிழ்ச்சியால் தோள்களைப் புடைத்து ஆரவாரித்தான். இலங்கை மூதூர் - மூது இலங்கை ஊர். நாஞ்சில் - மதில் மேல் குருவித் தலைபோல் அமைக்கப் பெற்ற உறுப்பு. சிலப்பதிகாரத்தில் அடைக்கலக் காதையில் காண்க (217). அண்டம் - பிரபஞ்ச உருண்டை என்றும் கூறலாம். திசைகள் கூறப் பெற்றமையால் (அண்டம் என்பதற்கு) வான்முகடு கூறப் பெற்றது. 'அண்டமுற நிமிர்ந்தாடும் அப்பன்' என்பர் அம்மையார் (மூத்த திருப்பதிகம்). அதிர - எதிரொலிக்க. வீரர்கள் உற்சாகத்தால் தோள் கொட்டுவர். தன் தோள் கொட்டித் தடவரையை... எடுத்தான் (நாவரசர் - ஆராத இன்னமுதை 10) கண்டனென்... பிறவும் என்னா... ஆர்த்தான் என்னும் பாடம் கொண்டு மதில் முதலானவற்றைப் பார்த்தேன் என்று கூறி ஆரவாரித்தான் என்று பொருள் கூறுவாரும் உளர். தளம் - சுண்ணச் சாந்து. தாழியும் சாந்தும் தளம் ஆகும். (பிங் 3615) கடிபொழில் என்பது காவற்காட்டை. இது காட்டரண். கொற்றவாயில் - கோபுரவாசல். நம் கோன் கொற்றவாயில் (சிலம்பு 20-16) களப மாட வீதி - யானை செல்லும் வீதி என்றும் கூறலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He saw the guarded groves of the ancient city of Ilaṅkai, the golden battlements,
- the circling walls, the victorious gateways, the streets of mansions
- white-plastered and set with gems, and all the rest;
- and he slapped his shoulders and roared, so that the cosmos and the eight directions shook.
What the poem says
From his height Aṉumaṉ now sees Ilaṅkai itself: its guarded groves, the gold battlements along the walls, the ring of ramparts, the great tower gates and the streets of white, gem-studded mansions. Delighted to have found the city, he slaps his shoulders, as warriors do when their spirits are up, and gives a roar that echoes to the top of the sky and in all eight directions. Some read the verse with a variant in which he says aloud, "I have seen" all this before roaring.