கம்பராமாயணம் 4791 · சுந்தர 2.3

Section சுந்தர காண்டம் / 2. கடல் தாவு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வன் தந்த வரிகொள் நாகம் வயங்கு அழல் உமிழும் வாய
பொன் தந்த முழைகள் தோறும் புறத்து உராய்ப் புரண்டு பேர்வ,
நின்று, அந்தம் இல்லான், ஊன்ற, நெரிந்து கீழ் அழுந்தும் நீலக்
குன்றம் தன் வயிறு கீறிப் பிதுங்கின குடர்கள் மான.

பொருள் · Meaning in Tamil

அந்தம் இல்லான் - அழிவில்லாத அனுமன்; நின்று ஊன்ற - நின்று (திருவடிகளை) வன்மையாக (மலையில்) பதிக்க (அதனால்); நெரிந்து - சிதைந்து; கீழ் அழுந்தி - பூமிக்கு அடியிலே புதைந்து; நீலக்குன்றம் - நீலநிறமுடைய மகேந்திர மலை; தன் வயிறு கீறி - தன்னுடைய வயிறு கிழிபட்டு; பிதுங்கிய குடர்கள் மான - வெளியிட்ட குடல்களைப் போல; பொன்தந்த முழைகள் தோறும் - பொன்னைத் தருகின்ற குகைகள் தோறும்; வயங்கு அழல் உமிழும் வாய - விளங்குகின்ற நெருப்பைக் கக்கும் வாயை உடைய; வன்தந்த வரிகொள் நாகம் - வலிமையான பற்களையும் கோடுகளையும் பெற்ற பாம்பு; உராய்ப் புரண்டு புறத்து போவ - உராய்ந்து கொண்டு புரண்டு வெளியே சென்றன. அனுமன் திருவடியின் அழுத்தம் பெற்ற மலையின் குடல்வெளிப்பட்டாற் போலப் பாம்புகள் புறத்தே போந்தன. அந்தம் இல்லான் - அழிவற்றவன் (சிரஞ்சீவி). பாம்பைத் 'தந்தி' என்பர் கச்சியப்பர் - தந்தி நஞ்சம் தலைக்கொளச் சாய்ந்தவர் (கந்த 3-10-21) ஊன்ற - அழுத்த. அருவரை நெரிய வூன்றும் குழகனே' (நாவரசர் - நெற்றி மேல் 10). பொன், மலையின்கண் தோன்றலின் பொன் தந்த முழைகள் என்றான். பொன்படு நெடுவரை. (சிலம்பு 26, 142) வரி அரவம் - கோடுகளை உடைய பாம்பு. வரி அரவே நாணாக, மால்வரையே வில்லாக (சம்பந்தர் விடியலோர் 7). அனுமன் கடல் தாவப் போகிறான் - அதற்கு ஆயத்தப் படுத்த அவன் திருவடியை வன்மையாகப் பதித்தான். வால்மீகி, “அனுமன் கடலைக் கடக்க விரும்பிக் கைகளாலும் கால்களாலும் அந்த மலையை அழுத்தினான். அப்பொழுது அந்தப்பர்வதம் ஒரு முகூர்த்த காலம் கிடுகிடென்று நடுங்கிற்று” என்பர். பிதுங்குதல் - அழுத்தம் பெற்ற பொருளுக்கு உள்ளே உள்ளவை வெளிப்படுதல். இலங்கைக் கோமான் தன்னைக் கதிர் முடியும், கண்ணும் பிதுங்க ஊன்றி (நாவரசர் தூண்டு சுடர் 10)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Striped serpents with strong fangs, their mouths spitting bright fire,
  2. came writhing and rolling out of every gold-yielding cave
  3. as the deathless one stood and pressed down, and the blue mountain, crushed and sinking below,
  4. looked as if its belly had been ripped open and its entrails were bulging out.

What the poem says

Bracing himself for the leap, the deathless Aṉumaṉ presses his feet hard into Mount Mayēntiram. The mountain is crushed and sinks into the earth, and from every cave, caves rich in gold, huge striped snakes come squirming out, spitting fire. To the poet they look like the guts spilling from the torn belly of the mountain. Vālmīki too says the mountain trembled for a while under Aṉumaṉ's hands and feet.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaṉ tanta varikoḷ nākam vayaṅku aḻal umiḻum vāya
poṉ tanta muḻaikaḷ tōṟum puṟattu urāyp puraṇṭu pōva,
niṉṟu, antam illāṉ, ūṉṟa, nerintu kīḻ aḻuntum nīlak
kuṉṟam taṉ vayiṟu kīṟip pituṅkiṉa kuṭarkaḷ māṉa.