கம்பராமாயணம் 4792 · சுந்தர 2.4

Section சுந்தர காண்டம் / 2. கடல் தாவு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1புகல் அரும் முழையுள் துஞ்சும் பொங்கு உளைச் சிங்கம் பொங்கி,
உகல் அரும் குருதி கக்கி, உள் உற நெரிந்த; ஊழின்
அகல் அரும் பரவை நாண அரற்றுறு குரல ஆகிப்
பகல் ஒளி கரப்ப வானை மறைத்தன பறவை எல்லாம்.

பொருள் · Meaning in Tamil

புகல் அரும் - நுழையமுடியாத; முழையுள் துஞ்சும் - குகையின்கண் உறங்கின்ற; பொங்கு உளைச்சீயம் - சிலிர்க்கின்ற பிடரி மயிரையுடைய சிங்கங்கள்; பொங்க - கொந்தளித்து; உகல் அருங் குருதி கக்கி - சிந்தக் கூடாத இரத்தத்தை வெளிப்படுத்தி, உள்ளுற நெரிந்த - உள்ளே சிதைந்தன; பறவை எல்லாம் - எல்லாப் பறவைகளும்; அகல் இரும் ஊழின் பரவைநாண - பரந்த பெரிய ஊழிக்காலத்துக் கடல்கள் வெட்கம் அடைய; அரற்றுறு குரல ஆகி - கதறுகின்ற கூக்குரலை உடையனவாய்; பகல் ஒளி கரப்ப - சூரியனுடைய பிரகாசம் மறையும்படி; வானை மறைத்தன - ஆகாயத்தை மூடின. அனுமன் திருவடிபட அழுந்திய மலைக்குகைக்குள் சிங்கங்கள் குருதி கக்கி நெரிந்தன. பறவைகள் வானை மறைத்தன. நெரிதல் - சிதைதல், நொறுங்குதல். வாளரக்கன் தலை பத்தும் நெரித்தவன் (நாவரசர் - மன்னு மலைமகள் 10)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The bristling-maned lions asleep in caves no one could enter leapt up in turmoil
  2. and, vomiting blood that should never be spilled, were crushed within; and, in their ranks,
  3. with cries of lament that put to shame the vast, wide ocean at the end of an age,
  4. all the birds hid the sky so that the light of day was hidden.

What the poem says

The pressure of Aṉumaṉ's feet crushes the lions sleeping deep in the mountain's caves; they start up, spit blood and die inside. All the birds take to the air together, shrieking louder than the roaring ocean at the end of the world, in flocks so thick they blot out the sun.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pukal arum muḻaiyuḷ tuñcum poṅku uḷaic cīyam poṅka,
ukal aruṅ kuruti kakki, uḷḷuṟa nerinta; ūḻiṉ
akal irum paravai nāṇa araṟṟuṟu kurala ākip
pakal oḷi karappa vāṉai maṟaittaṉa paṟavai ellām.