கம்பராமாயணம் 4793 · சுந்தர 2.5

Section சுந்தர காண்டம் / 2. கடல் தாவு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மொய் உறு செவிகள் தாழ்ந்து முதுகு உற, முறை கால் தள்ள,
மை உறு விசும்பின் ஊடு நிமிர்ந்த வாலதிய, மஞ்சின்
மெய் உறத் தழீஇய மெல் என் பிடியொடும், வெருவலோடும்,
கை உற மரங்கள் சுற்றிப் பிளிறின களிநல் யானை.

பொருள் · Meaning in Tamil

களிநல் யானை - மதமயக்கமுடைய பெரிய யானைகள்; மைஅறு விசும்பினூடு - மேகம் இல்லாத ஆகாயத்தின்கண்; நிமிர்ந்த வாலதிய - நீண்ட வாலையுடைய (யானைக் கன்றுகள்); மொய்உறு செவிகள் - வலிமை மிக்க காதுகள்; தாவி முதுகுற - பரவி முதுகைச்சார (அதனால்); முறைகால் தள்ள - பருவக் காற்று வீச; மஞ்சின் மெய்யுறத் தழீஇய - மேகத்தைப் போல (தம்) உடம்பைத் தழுவிக் கொண்ட, மெல்லென் பிடியொடும் - மென்மையான பெண் யானைகளுடன்; வெருவலோடும் - அச்சத்தோடும்; கைஉற மரங்கள் சுற்றி - கைகளால் மரங்களைச் சுற்றிக் கொண்டு; பிளிறின - வீறிட்டுக் கதறின. யானை, கன்று, பிடியுடன் அச்சத்தோடு மரங்களைப் பற்றிப் பிளிறின. வாலதிய - வாலையுடைய கன்று. வாலதி - வால். அ - உடைமைப் பொருளைக்குறித்தது. வாலதிய என்னும் பலவின்பால் வினைமுற்று வினையாலணையும் பெயராயிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With their strong ears flung back against their backs, with the gale driving in gusts,
  2. the calves with tails stuck straight up into the cloudless sky,
  3. and with the gentle she-elephants pressed close to their bodies like clouds, in terror,
  4. the great rutting elephants wound their trunks round the trees and trumpeted.

What the poem says

The mountain's elephants panic too. Their calves flee with ears flattened against their backs and tails held stiffly up into the clear sky, and the soft-bodied cows huddle against the bulls. The great bull elephants, mad with musth, coil their trunks round the trees to hold on and bellow in fear.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1moyyuṟu cevikaḷ tāvi mutuku uṟa, muṟai kāl taḷḷa,
mai aṟu vicumpiṉūṭu nimirnta vālatiya, mañciṉ
mey uṟat taḻīiya melleṉ piṭiyoṭum, veruvalōṭum,
kaiyuṟa maraṅkaḷ cuṟṟip piḷiṟiṉa kaḷinal yāṉai.