கம்பராமாயணம் 4794 · சுந்தர 2.6
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மின்பிறழ் குடுமிக் குன்றம் - ஒளி விளங்கும் தலைமையுடைய மகேந்திர மலையின்; வெரிந் - முதுகின்கண்; பொன்பிறழ் சிமயக்கோடு - பொன்போலப் பொலிவு பெற்ற சிகரமானது; உற - நன்றாக அழுந்த (அதனால்); பொடியுறப் பொறி சிந்த - பொடிப் பொடியாகிப் பொறி பறக்க; விரியும் வேலை - பிளவுபடும் சமயத்தில்; வல்லியம் - புலிகள்; புன்புற மயிரும் பூவா - மெல்லிய உடம்பில் பூனை மயிரும் முளைக்காத; புறத்துக் கட்புலம் நாறா - வெளியில் தோன்றும்படி கண்கள் திறவாத; வன்பறழ் - (தம்முடைய) வலிமையான குட்டிகளை; வாயில் கவ்வி இரிந்த - வாயில் பற்றி அஞ்சியோடின.
சிகரம்பொடியாகி மலை பிளந்தது என்றும் கூறலாம். கோடு அழுந்தக் குன்றம் பிளந்தது என்று இங்கே கொள்ளப் பட்டது. சிமயம் - சிகரம் - இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலை (சிலம்பு 5-97) கோடு - சிகரத்தின் நுனி. பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே (புறம் 2). உடலில் தோன்றும் புல்லிய மயிரைப் பூனைமயிர் என்பர். சங்க இலக்கியம் அரிமயிர் என்று பேசும். பறழ் - குட்டி, நாய், புலி முதலான விலங்குகளின் குட்டியைப் பறழ் என்பது மரபு. புலிப்பறழ் அன்ன பூஞ்சினை வேங்கை (மரபியல் மேற்கோள்) மலைக்கு முதுகு கூறப்பெற்றுள்ளது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the gold-gleaming crests and peaks were ground to dust and scattered sparks,
- and the mountain with its lightning-flashing summit split open down its back,
- the tigers took in their mouths their strong cubs, whose fine body hair had not yet grown
- and whose eyes had not yet opened to the world outside, and fled.
What the poem says
Under Aṉumaṉ's weight the golden peaks of the mountain grind to powder, striking sparks, and the mountain splits down its back. The tigers snatch up their newborn cubs in their mouths, cubs so young that their fur has not yet come in and their eyes have not yet opened, and run for their lives.