கம்பராமாயணம் 4796 · சுந்தர 2.8

Section சுந்தர காண்டம் / 2. கடல் தாவு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தாரகை சுடர்கள் மேகம் என்று இவை - நட்சத்திரம், சூரிய சந்திரர்கள்; மேகம் என்னும் இப்பொருள்கள்; தவிர - (சார்ந்து வராமல்) நீங்கிநிற்க; தாழ்ந்து - இறங்கி; பாரிடை அழுந்துகின்ற - பூமியின்கண் கீழ்நோக்கிப் போகும்; படர்நெடும் பனிமாக் குன்றம் - விரிந்து நீண்ட குளிர்ந்த மலை; கூர்உகிர் குவவுத் தோளான் - கூர்மையான நகங்களையும் திரண்ட தோள்களையும் உடைய அனுமன்; கூம்புஎன - பாய்மரம் போலிருக்க; ஆர்கலி அழுவத்து - கடலின் ஆழத்திலே; குமிழி பொங்க - நீர்க்குமிழிகள் கொந்தளிக்க; ஆழும் கலம் எனல் ஆயிற்று - மூழ்குகின்ற கப்பல் என்று கூறும் தன்மையைப் பெற்றது.

அனுமன் கப்பலின்பாய்மரம் போன்றிருந்தான். அழுந்தும் மலை கடலுள் ஆழும்கப்பல் போன்றிருந்தது. கூம்பு - பாய்மரம். வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே (குலசேகரர் 5-5). கப்பலையும் மலையையும் ஒப்பிடுதலைக் குறுந்தொகையில் காண்கிறோம். “வாழி தோழி தெண்டிரைக் கடல் ஆழ் கலத்தில் தோன்றி - மாலை மறையும் அவர் மணி நெடுங் குன்றே” (குறு 240) அழுவம் - ஆழம் பரப்பும் ஆம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Sinking down, leaving behind the stars, the sun and moon, and the clouds,
  2. the wide, tall, cold, great mountain pressing into the earth,
  3. with the sharp-clawed, round-shouldered one standing as its mast, and bubbles boiling up,
  4. became like a ship going down into the depths of the roaring sea.

What the poem says

The mountain sinks so far that it leaves the stars, sun, moon and clouds behind. With Aṉumaṉ standing tall on top like a mast, it looks like a ship going down in the ocean with bubbles rising around it. The commentary notes that a classical Tamil love poem also compares a distant hill fading at dusk to a ship sinking at sea.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tārakai, cuṭarkaḷ, mēkam, eṉṟu ivai tavirat tāḻntu,
pāriṭai aḻuntukiṉṟa paṭar neṭum paṉi māk kuṉṟam,
kūr ukirk kuvavut tōḷāṉ kūmpu eṉak, kumiḻi poṅka,
ārkali aḻuvattu āḻum kalam eṉal āyiṟṟu aṉṟē!