கம்பராமாயணம் 4797 · சுந்தர 2.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அருவி - மகேந்திரமலையின் அருவி; தாது - காவிக் கற்களையும், உகுநறுமென் சாந்தம் - கரைந்து தேய்ந்த நறுமணம் வீசும் சந்தனக் குழம்பையும், குங்குமம் - குங்குமப் பூக்களையும்; குலிகம் - சாதிலிங்கத்தையும்; தண்தேன் - குளிர்ந்த; போதுஉகு - மலர்கள் சிந்திய; பொலன்தாது - பொன் நிறம் பெற்ற மகரந்தங்களையும்; என்று இத் தொடக்கத்த யாவும் - இது முதலான பல பொருள்களையும்; பூசி - தன்மேல் பூசிக் கொண்டு; மீதுறு - மலையின் மேலே உள்ள; சுனை நீர் ஆடி - சுனை நீரிலே குளித்து; உலகின் போய் வீழ்வ - பூமியில் பரந்து வீழும் காட்சி; ஓதிய குன்றம் - பேசப்பெற்ற மலை; கீண்டு - வயிறு பிளக்கப் பெற்று; குருதி நீர் சொரிந்தால் ஒத்த - இரத்தமாகிய நீரைச் சொரிவதைப் போன்றிருந்தன.
மணமுள்ளபொருள்களைப் பூசி நீராடுவார் போல அருவி, மகரந்தம் முதலானவற்றைப் பூசிச் சுனையில் நீராடின. அது, நிலத்தில் பாயும்போது மலை பிளந்து குருதி வீழ்வது போன்றிருந்தது. உகும் - கரைந்து தேயும். உப்பு இயல் பாவை உறை உற்றதுபோல் உக்கு விடும், என் உயிர் என்னும் கலிப்பாவுக்கு (நெய்தல் 2/-/6-/7) உரை வகுத்த நச்சினார்க்கினியர் “உயிர்... கரைந்து விடா நின்றது” என்று உரை வகுத்தார். குலிகம் - சாதிலிங்கம். குன்றுக்குக் குருதி குறிக்கப் பெறுகிறது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Smeared with red ochre, with fragrant soft sandal paste rubbed loose, with saffron, vermilion, cool honey,
- golden pollen shed by blossoms, and all such things,
- the waterfalls, after bathing in the pools on the heights, went pouring down to the world below,
- like the blood that would gush if that famous mountain were split open.
What the poem says
As the mountain is crushed, its waterfalls run red. On their way down they pick up red ochre, crumbled sandalwood, saffron, vermilion, honey and pollen, as if anointing themselves before bathing in the mountain pools. When they spill onto the plain below, the coloured water looks like blood pouring from the mountain's split body.