கம்பராமாயணம் 4799 · சுந்தர 2.11

Section சுந்தர காண்டம் / 2. கடல் தாவு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வெயில் இயல் குன்றம் கீறி வெடித்தலும், நடுக்கம் எய்தி
மயில் இயல் தளிர்க்கை மாதர் தழீஇக் கொளப், பொலிந்த வானோர்,
அயில் எயிற்று அரக்கன் அள்ளத் திரிந்த நாள், அணங்கு புல்லக்
கயிலையில் இருந்த தேவைத் தனித்தனிக் கடுத்தல் செய்தார்!

பொருள் · Meaning in Tamil

வெயில்இயல்குன்றம் - ஒளியமைந்த மகேந்திர மலை; கீண்டு வெடித்தலும் - பிளவுபட்டு இரண்டாதலும்; மயில்இயல் தளிர்க்கை மாதர் - மயில் போன்ற சாயலும், தளிர் போன்ற கைகளும் கொண்ட தெய்வப் பெண்கள்; நடுக்கம் எய்தி தழீஇக் கொள்ள - அச்சமுற்றுத் தழுவிக்கொள்ள (அதனால்); பொலிந்த வானோர் - பூரித்த தேவர்கள்; அயில் எயிற்று அரக்கன் - கூரிய பற்களைப் பெற்ற இராவணன்; அள்ள - பெயர்த்தெடுக்க; திரிந்த நாள் - (கயிலாய மலை) அசைந்த காலத்தில்; அணங்குபுல்ல - உமாதேவி தழுவிக்கொள்ள; கயிலையில் இருந்த தேவை - கயிலாய மலையில் வீற்றிருந்த சிவபிரானை; தனித்தனி கடுத்தல் செய்தார் - ஒவ்வொருவரும் தனித்தனியே ஒத்திருந்தார்கள். தத்தம்தேவிமாரால் தழுவப்பெற்ற தேவர்கள் உமையம்மை தழுவக் கயிலாய மலையில் மகிழ்ந்த சிவபிரானை ஒத்திருந்தனர். வெயில் - ஒளி - வெயில்விரி கனகக் குன்றத்து எழில் கெட - (கம்பன் - மிகை 226)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the shining mountain split and burst apart, the peacock-graceful women with hands like tender shoots,
  2. trembling, clung to them, and the gods, glowing with delight,
  3. each one resembled the God who sat on Kayilai on the day it shook
  4. when the sharp-fanged demon lifted it, and the Goddess clung to Him.

What the poem says

When the mountain cracks, the celestial women staying there cling to their husbands in fright, and the gods are delighted by their embrace. The poet compares each of them to Civaṉ on Mount Kailāsa on the day Irāvaṇaṉ tried to lift the mountain: as it shook, Umā threw her arms around her lord. The allusion also foreshadows Irāvaṇaṉ, whose city Aṉumaṉ is about to enter.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veyil iyal kuṉṟam kīṇṭu veṭittalum, naṭukkam eyti
mayil iyal taḷirkkai mātar taḻīik koḷap, polinta vāṉōr,
ayil eyiṟṟu arakkaṉ aḷḷat tirinta nāḷ, aṇaṅku pullak
kayilaiyil irunta tēvait taṉittaṉik kaṭuttal ceytār!