கம்பராமாயணம் 4800 · சுந்தர 2.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஊறிய நறவும் - (வியஞ்சனத்துடன்) ஊறிக்கிடந்த மதுவும்; உற்ற குற்றமும் - நேர்ந்த பிழையும்; உணர்வை உண்ண - அறிவை அழிக்க (அதனாலே); சீறிய மனத்தர் - கொதிப்புற்ற மனத்தையுடைய; தெய்வ மடந்தையர் - தேவலோகப் பெண்கள் (மலையின் அதிர்ச்சியால்); ஊடல் தீர்வுற்று ஆறினர் - ஊடல் நீங்கி அமைதியடைந்தனர்; அஞ்சுகின்றார் - அச்சம் அடைந்து; அன்பரைத் தழுவி - கணவரைத் தழுவிக்கொண்டு; உம்பர் ஏறினர் - விண்ணின் கண்ணே சென்று; இட்டு நீத்த - கூண்டுக்குள் அடைத்து விட்டு விட்டுவந்த; பைங்கிளிக்கு - இளமையான கிளியின் பொருட்டாக; இரங்குகின்றார் - கவலைப்படுகிறார்கள்.
கூட்டுக்குள்செறிக்காமல் இருந்தால் கிளி பறந்து சென்று பிழைக்குமே, பறக்கவியலாதபடி அடைத்தோமே என்று வருந்தியதை இட்டு நீத்த என்னும் தொடர் உணர்த்தும். மலையின் அசைவால் ஊடல்துன்பம் போயிற்று. இட்டு நீத்த பைங்கிளியால் வந்த துன்பம் வளர்ந்தது. பிராட்டிகூடத் தான் விட்டுவந்த கிளியைப் பாதுகாக்கும்படி தன் சகோதரிகட்குக் கூறும்படி சுமந்திரனிடம் கூறினாள். “இது என் பைங்கிளி எடுத்த பைங்கிளி” என்னும் ஐங்குறுநூற்றுப் பாடல் (375) மகளிர் கிளிகள்பால் கொண்ட பாசத்தைப் புலப்படுத்தும். பைங்கிளி - இளங்கிளி; பசுமை - இளமை. பசுங்கதிர்க் கொத்தொடு (தக்க பரணி 605) என்னும் தொடருக்கு விளக்கம் கூறும்போது பசுங்கதிர் - பச்சைக் கதிர். பசுமை நிறத்திற் சென்றதன்று. இளமையிற் சென்றது, என்று தெளிவித்தது ஈண்டும் ஏற்கும். பாரதிகூட “பச்சைக் குழந்தை” என்பார். “பச்சைப் பிள்ளை” எனப் பேச்சு வழக்கிலும் இளங்குழந்தை குறிக்கப்படுவதை நினைவிற் கொள்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The divine maidens, whose minds had been inflamed while steeped wine and their lovers' offence
- ate away their judgement, now had their sulking ended
- and grew calm; frightened, they embraced their beloved and rose
- into the sky, grieving for the young parrots they had left shut in their cages.
What the poem says
The celestial women on the mountain had been quarrelling with their lovers, angry over some fault and heated with wine. The shaking of the mountain ends their sulks at once: frightened, they hold their husbands and fly up to safety. But now a new worry grows: the pet parrots they left locked in cages, which cannot fly away to save themselves. The commentary recalls that Cītai too, when she went to the forest, asked that her pet parrot be looked after.