கம்பராமாயணம் 4801 · சுந்தர 2.13
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இத்திறம் நிகழும் வேலை - இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுங் காலத்தில்; இமையவர் முனிவர் மற்றை முத்திறத்து உலகத்தாரும் - தேவர்களும், முனிவர்களும் இன்னும் மூவகையான உலகத்தில் இருப்பவர்களும்; முறை முறை - தகுதிக்கேற்ற வரிசைப்படி; விரைவில் மொய்த்தார் - விரைவாக ஆகாயத்தில் ஒன்று கூடினர்; கொத்து உறுமலரும் - கொத்துக் கொத்தான பூக்களையும்; சாந்தும் - சந்தனத்தையும்; சுண்ணமும் - வாசனைப் பொடிகளையும்; இனைய - இப்படிப்பட்ட பொருள்களையும் தூவி - (அனுமன் திருமேனியில்) அள்ளி வீசி; வித்தக - அறிஞனே!; சேறி என்றார் - “செல்க!” என்று கூறினார்கள்; வீரனும் விரைவது ஆனான் - அனுமனும் வேகமாகப் போக முற்பட்டான்.
இதுவரை அனுமன் திருவடி அழுத்திய காரணத்தால் மலையின்கண் நிகழ்ந்தவற்றைக் கவிச்சக்கரவர்த்தி விவரித்தார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- While all this was happening, the unblinking gods, the sages, and the beings
- of all three worlds crowded swiftly together, each in due order,
- and scattering clustered flowers, sandal paste, fragrant powders and the like,
- said, “Wise one! Go!” and the hero made ready to speed away.
What the poem says
With this verse the poet finishes describing what Aṉumaṉ's pressing feet did to the mountain. Now the gods, sages and beings of the three worlds gather in the sky, shower him with flowers, sandal paste and scented powders, and send him off with a blessing. Aṉumaṉ prepares to spring.