கம்பராமாயணம் 4802 · சுந்தர 2.14
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உறுவலித் துணைவர் - மிக்கவலிமையையுடைய நண்பர்கள் (அனுமனை நோக்கி); விசயம் வைகும் - வெற்றி குடிகொண்ட; விலங்கல்தோள் அலங்கல்வீர - மலைபோன்ற தோளில் மாலையணிந்த வீரனே!; குறுமுனி குடித்த வேலை - அகத்திய முனிவனால் பருகப்பட்ட இந்தக் கடல்; குப்புறும் கொள்கைத்தாதல் - பாய்ந்து கடக்க வேண்டிய கோட்பாட்டுக்கு உரிய பொருளாயிருத்தல்; வெறுவிது - மதிக்கத் தகாதது (பயனற்றது); இது சிறிது - இந்தக் கடல் (என் வலிமைக்கு) அற்பம்; என்று இகழற்பாலையல்லை - என்று இக் கடலை அவமதிக்கும் பான்மையை அடையாதே; நீ சேறி - நீ செல்வாயாக; என்னா - என்று; சொன்னார் - கூறினார்கள் (அம்மொழி கேட்டு); பொருப்பை ஒப்பான் - மலையை ஒத்த அனுமான்; ஒருப்பட்டான் - (அவர்கள் சொற்களுக்கு) உடன் பட்டான்.
“பேருருக் கொண்ட என் ஆற்றலுக்குக் குறுமுனி குடித்த கடல் அற்பம்” என்று நீ கருதாது செல்க என்று துணைவர்கள் கூறினார்கள். அவர்கள் மொழிகட்கு அனுமன் உடன் பட்டான். குறுமுனி - அகத்தியர். குப்புறுதல் - பாய்ந்து கடத்தல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “That this sea, which the short sage once drank, should be a thing worth leaping
- is nothing much, O hero with garlands on mountain shoulders where victory dwells!
- Yet do not scorn it, saying ‘This is small’; go!” So
- spoke his mighty companions; and he who was like a mountain agreed.
What the poem says
His monkey comrades give Aṉumaṉ a last word of advice. The sea is nothing to one of his strength; after all, the short sage Akattiyaṉ once drank it dry. Still, he must not underestimate it. Aṉumaṉ, as huge as a mountain, accepts their counsel.