கம்பராமாயணம் 4803 · சுந்தர 2.15

Section சுந்தர காண்டம் / 2. கடல் தாவு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'இலங்கையின் அளவிற்று அன்றால், இவ் உரு எடுத்த தோற்றம்!
விலங்கவும் உளதன்று! 'என்று, விண்ணவர் வியந்து நோக்க,
அலங்கல் தாழ் மார்பன் முன் தாழ்ந்து, அடித்துணை அழுத்தலோடும்,
பொலம் கெழு மலையும், தாளும், பூதலம் புக்க மாதோ!

பொருள் · Meaning in Tamil

இவ்வுரு - (அனுமன்மேற்கொண்ட) இந்த வடிவத்தின்; எடுத்த தோற்றம் - பெருமிதமான உயர்ச்சி; இலங்கையின் அளவிற்றன்று - இலங்கையை எல்லையாகக் கொண்டது அன்று; விலங்கவும் - (அனுமனைத்) தடுத்து நிறுத்தவும்; உளது அன்று என்று - ஒரு பொருளும் இல்லையென்று; விண்ணவர் - தேவர்கள்; வியந்து நோக்க - ஆச்சரியப்பட்டுப் பார்க்க; அலங்கல் தாழ்மார்பன் - மாலைகள் தங்கிய மார்பை உடைய அனுமான்; முன் தாழ்ந்து - முன் புறமாக மேனியை வளைத்து; அடித்துணை அழுத்தலோடும் - இரண்டு திருவடிகளையும் ஊன்றியவுடன்; பொலன்கெழு மலையும் தாளும் - பொன் மயமான மகேந்திர மலையும் அதன் அடிச் சாரலும்; பூதலம் புக்க - பூமியின் அடித்தளத்தைச் சென்று சேர்ந்தன.

அனுமன் கொண்ட பேருரு இலங்கையை எல்லையாகக் கொண்டதன்று. இவன் இலங்கையடைந்ததும் இவனைத் தடுத்து நிறுத்தும் பொருள் இல்லையே என்று தேவர்கள் கருதினர். அளவு - எல்லை. தோற்றம் - உயர்ச்சி. நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் (குறள் 124) தாழ் - தங்கிய, மாலைதாழ் வியனமார்ப; (கலித்தொகை 33) தொங்குதல் என்றும் கூறலாம். தாள் - அடிவாரம். இருள்கீள விரி தாள் கயிலாய மலையே (3-ஆம் திருமறை)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “The height this form has taken is not bounded by Ilaṅkai!
  2. Nothing exists that could stop it!” As the gods gazed in wonder,
  3. he whose chest was hung with garlands bent forward and pressed down both his feet,
  4. and the golden mountain and its foothills sank into the earth.

What the poem says

The gods marvel that Aṉumaṉ's giant form reaches beyond Ilaṅkai itself, and that nothing could hold him back once he arrives there. Leaning forward, he presses down with both feet for the take-off, and the golden mountain and the slopes at its foot are driven deep into the ground.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ilaṅkaiyiṉ aḷaviṟṟu aṉṟāl, ivvuru eṭutta tōṟṟam!
vilaṅkavum uḷatu aṉṟu! 'eṉṟu, viṇṇavar viyantu nōkka,
alaṅkal tāḻ mārpaṉ muṉ tāḻntu, aṭittuṇai aḻuttalōṭum,
polaṉ keḻu malaiyum, tāḷum, pūtalam pukka mātō!