கம்பராமாயணம் 4804 · சுந்தர 2.16
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வீரன் - அனுமன்; வால்விசைத்து எடுத்து - வாலை வேகமாக உயர்த்தி; வன்தாள் மடக்கி - வலிமையான திருவடிகளை மடக்க; மார்பு ஒடுக்கி - மார்பைச் சுருக்கி; மானத் தோள்விசைத் துணைகள் பொங்க - பெருமையும் புகழும் வெற்றியும் பெற்ற இரண்டு புயங்கள் பூரிக்க; கழுத்தினைச் சுருக்கி - கழுத்தை ஒடுக்கி; தூண்டும் கால்விசைத் தடக்கை நீட்டி - தூண்டுகின்ற காற்றைப் போன்று வேகமாகக் கைகளை நீட்டி; உச்சி விரிஞ்சன் நாடு உரிஞ்ச - தலை பிரம்ம லோகத்தை உராயும்படி; கண்புலம் கதுவா வண்ணம் - கண்ணின் பார்வை பற்ற முடியாதபடி; மேல் விசைத்து எழுந்தான் - விண்ணில் வேகமாக எழும்பினான். அனுமன் வால்எடுத்து, தாள் மடக்க, மார்பு ஒடுக்கி, கழுத்தினைச் சுருக்கி, கை நீட்டி உச்சி விரிஞ்சன் நாடு உரிஞ்ச விசைத்து எழுந்தான். கடல் கடக்க எழுந்த அனுமனின் மெய்ப்பாடு விளக்கப்படுகிறது. விசையம் என்னும் சொல் அம் சாரியை குறைந்து வந்துள்ளது. வன்மை என்றும் வேகம் என்றும் கூறலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Whipping up his tail, bending his strong legs, drawing in his chest, his proud
- pair of powerful shoulders swelling, hunching his neck, stretching out
- his great arms swift as the driving wind, too fast for any eye to follow,
- the hero shot upward, his head grazing the world of Viriñcaṉ.
What the poem says
This is the moment of the leap, described like an athlete's spring: tail raised, knees bent, chest pulled in, shoulders bunched, neck drawn down, arms flung forward. Aṉumaṉ hurls himself into the air too fast for any eye to follow, so high that his head brushes the world of Piramaṉ (Viriñcaṉ).