கம்பராமாயணம் 4810 · சுந்தர 2.22
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
துள்ளிய மகரமீன்கள் துடிப்புஅற - செருக்கிப் பாயும் இயல்புடைய மீன்கள் கிளர்ச்சியற்றுப் போகவும்; சுறவு தூங்க - சுறாமீன்கள் அடங்கிக் கிடக்கவும்; ஒள்ளிய பனைமீன் துஞ்சும் - ஒளிமிக்க பனைமீன்கள் இறக்க இடனாகும்; திவலைய ஊழிக்காலின் - நீர்த்திவலைகளை வீசுகின்ற யுகமுடிவில் வீசுகின்ற காற்றைப்போல; வள்உகிர் வீரன் - கூர்மையான நகத்தைப் பெற்ற அனுமன்; செல்லும் - பாய்ந்து செல்கின்ற; விசைபொர மறுகி - வேகமானது தாக்க (அதனால்) அல்லோலப்பட்டு; வாரி தள்ளிய திரைகள் - கடலில் உந்தப் பெற்ற அலைகள்; இலங்கைமேல் - இலங்கை மாநகரின்கண்; முந்துற்று தவழ்ந்த - அனுமனுக்கு முன் தத்திச் சென்றன.
மாது; ஓ - அசைகள். மகர மீன், சுறவு, பனைமீன் - மீன் வகைகள். முந்துற்று - அனுமனுக்கு முன்னே தாம் செல்வன போலச் சென்று என்பது ஐயரவர்கள் பதிப்பின் குறிப்பு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So that the leaping makara fish lay still, the sharks were stunned,
- and the shining palm-fish died, like the spray-flinging wind at the end of the age,
- the speed with which the sharp-clawed hero went struck the sea; churned up,
- the waves it drove rushed on ahead and crept over Ilaṅkai.
What the poem says
Aṉumaṉ's passage is like the storm wind at the end of the world. The great sea creatures are stunned or killed, and the waves he pushes before him race ahead of him and wash up over Ilaṅkai, as if hurrying to arrive first.