கம்பராமாயணம் 4811 · சுந்தர 2.23

Section சுந்தர காண்டம் / 2. கடல் தாவு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இடுக்கு உறு பொருள்கள் என்னாம்? எண்திசை சுமந்த யானை
நடுக்கு உற, விசும்பில் செல்லும் நாயகன் தூதன், நாகம்
ஒடுக்கு உறு காலை, வன் காற்று அடியொடும் ஒடித்த அந்நாள்,
முடுக்கு உறக் கடலில் செல்லும் முத்தலைக் கிரியை ஒத்தான்!

பொருள் · Meaning in Tamil

எண்திசை சுமந்தயானை - எட்டுத் திசைகளையும் தாங்கும் யானைகள்; நடுக்குற - நடுக்கம் அடையும்படியாக; விசும்பில் செல்லும் நாயகன் தூதன் - ஆகாயத்திற் பறந்து செல்லும் இராம தூதனான அனுமன்; நாகம் ஒடுக்குறு காலை - ஆதிசேடன் மேருமலையைத் தன் படங்களில் ஒடுக்கிக் கொண்ட சமயத்தில்; வன்காற்று - கொடுங்காற்று; அடியொடும் ஒடித்த அந்நாள் - அடியொடு முறித்த அக்காலத்தில்; முடுக்குறக் கடலில் செல்லும் - வேகமாக உந்தப்படத் தென் கடலின்கண் போகும்; முத்தலைக் கிரியும் ஒத்தான் - மூன்று தலைகளைப் பெற்ற திரிகூட மலையையும் ஒத்திருந்தான் (என்றால்); இடுக்குஉறு - அவன் போகும் வழி இடையிலுள்ள; பொருள்கள் என்னாம் - என்ன பாடுபடும்.

நாகம் - பாம்பு (ஆதிசேடன்). அனுமனின் இரண்டு தோள்களும் தலையும் - முத்தலைச் சிகரம் போன்றிருந்தன. ஆதிசேடனும் வாயுதேவனும் தங்கள் வலிமையை நிலைநிறுத்த மேற்கொண்ட வஞ்சினப்படி ஆதிசேடன் மேருமலையைத் தன்னுடைய ஆயிரம் படங்களால் மூடிக் கொண்டான். வாயுதேவன் மலையை அசைத்துப் பார்த்தான். தேவர்கள் வேண்டிக்கொள்ள சேடன் தன்னுடைய மூன்று படங்களை உயர்த்த வாயுதேவன் மூன்று சிகரங்களைக் கடலில் இட்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. What would become of the things caught in his path? The Lord's envoy,
  2. going through the sky so that the elephants bearing the eight directions trembled,
  3. was like the three-peaked mountain that, on the day the fierce wind broke it off at the root
  4. while the Serpent held Mēru clasped, went hurtling into the sea.

What the poem says

The poet compares the flying Aṉumaṉ, his two shoulders and head rising like three peaks, to Mount Tirikūṭam, the three-peaked mountain on which Ilaṅkai stands. In the legend Ādiśēṣaṉ and the Wind god once tested their strength: the serpent wrapped Mēru in his thousand hoods and the Wind tried to shake it loose. When Ādiśēṣaṉ lifted three hoods at the gods' request, the Wind snapped off three peaks and flung them into the southern sea. Aṉumaṉ, the Wind's son, now hurtles toward that same mountain. The elephants that hold up the eight directions tremble as he passes.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṭukku uṟu poruḷkaḷ eṉ ām? eṇticai cumanta yāṉai
naṭukku uṟa, vicumpil cellum nāyakaṉ tūtaṉ, nākam
oṭukkuṟu kālai, vaṉ kāṟṟu aṭiyoṭum oṭitta annāḷ,
muṭukkuṟak kaṭalil cellum muttalaik kiriyum ottāṉ!