கம்பராமாயணம் 4812 · சுந்தர 2.24

Section சுந்தர காண்டம் / 2. கடல் தாவு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கொட்பு உறு புரவித் தெய்வக் கூர் நுதிக் குலிசத்தாற்கும்,
கண் புலம் கதுவல் ஆகா வேகத்தான், கடலும், மண்ணும்
உள்படக் கூடி அண்டம் உற உள செலவின், ஒற்றைப்
புட்பக விமானம் தான் அவ் இலங்கை மேல் போவது ஒத்தான்!

பொருள் · Meaning in Tamil

கொட்புறு புரவி - சுழன்றுசுழன்று செல்கின்ற குதிரைமேல் உள்ள; தெய்வக் கூர்நுதி - தெய்வத் தன்மை பெற்ற கூரிய நுனியையுடைய; குலிசத்தாற்கும் - வச்சிராயுதத்தை ஏந்திய இந்திரனுக்கும்; கண்புலன் கதுவல் ஆகா வேகத்தான் - கண்ணின் பார்வை பின்பற்ற முடியாத வேகமுடைய அனுமன்; கடலும் மண்ணும் - கடலும் கடலாற் சூழ்ந்த உலகமும்; உட்படக்கூடி - தன்னுள் ஒடுங்கும்படி (பேருருக் கொண்டவனாய்), அண்டம் உற உள - அண்டத்தின் உச்சியானது மோதும்படி; செலவின் - செல்கின்ற பயணத்தால்; ஒற்றைப் புட்பக விமானம் - ஒப்பற்ற புட்பக விமானம்; இலங்கைமேல் போவது ஒத்தான் - இலங்கை மாநகருக்குப் போவதை ஒத்திருந்தான்.

இந்திரனின் பார்வைக்கும் எட்ட முடியாத வேகமுடைய அனுமன், புட்பகவிமானம் இலங்கைக்குப் போவதைப் போன்றிருந்தான். கடலும் உலகும் தன்னுள் அடங்கும்படி பேருருக் கொள்வதால் புட்பக விமானம்போல் அனுமன் இருந்தான். விமானம் எவ்வளவு மக்கள் வந்தாலும் விரியும். “அண்டம் உறவுள செலவின்” அநேக அண்டங்கள்வைத்தாலும் கடக்கும் செலவு என்பது பழைய உரை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Moving at a speed that even the eyes of the god of the sharp divine thunderbolt,
  2. who rides the wheeling horse, could not follow, so vast that sea and earth
  3. were taken within him, his flight reaching the dome of the universe,
  4. he was like the matchless Puṣpaka chariot itself going to that Ilaṅkai.

What the poem says

Even Intiraṉ, wielder of the thunderbolt, cannot follow Aṉumaṉ with his eyes. So huge that he seems to contain sea and land, Aṉumaṉ is likened to the Puṣpaka, the flying chariot that Irāvaṇaṉ seized from Kubēra and that grows to hold however many ride in it, heading home to Ilaṅkai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1koṭpuṟu puravit teyvak kūr nutik kulicattāṟkum,
kaṇpulaṉ katuval ākā vēkattāṉ, kaṭalum, maṇṇum
uṭpaṭak kūṭi aṇṭam uṟa uḷa celaviṉ, oṟṟaip
puṭpaka vimāṉam tāṉ av ilaṅkai mēl pōvatu ottāṉ!