கம்பராமாயணம் 4813 · சுந்தர 2.25

Section சுந்தர காண்டம் / 2. கடல் தாவு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1விண்ணவர் ஏத்த, வேத முனிவரர் வியந்து வாழ்த்த,
மண்ணவர் இறைஞ்சச், செல்லும் மாருதி, மறம் உள் கூர,
'அண்ணல் வாள் அரக்கன் தன்னை அமுக்குவென் இன்னும்! 'என்னாக்
கண்ணுதல் ஒழியச் செல்லும் கயிலையங் கிரியை ஒத்தான்!

பொருள் · Meaning in Tamil

விண்ணவர் ஏத்த - தேவர்கள் போற்றவும்; வேத முனிவர் வியந்து - வேதங்களை அறிந்த சிறந்த முனிவர்கள் வியப்புற்று; வாழ்த்த - வாழ்த்தவும்; மண்ணவர் இறைஞ்ச - மண்ணுலகத்தவர் வணங்கவும், செல்லும் மாருதி - போகும் அனுமான்; உள் மறம் கூர - உள்ளத்தே (இராவணன் மேல்) கோபம்மிகுதியாவதால்; அண்ணல் வாள் - பெருமிதமுடைய கொடிய; அரக்கன்தன்னை - இராவணனை; இன்னும் அமுக்குவென் - மறுபடியும் அழுத்துவேன்; என்னா - என்று கருதி, கண்ணுதல் ஒழிய - சிவபிரான் இல்லாமல்; செல்லும் - தனித்துப் போகின்ற; கைலைஅம் கிரியும் - கயிலாயமலையையும்; ஒத்தான் - ஒத்திருந்தான். வெண்ணிறமுடைய அனுமன் இராவணன் மேல் கொண்ட சீற்றம் அதிகரிக்க அவனை அமுக்கச் செல்லும் கயிலாயம் போன்றிருந்தான். மறம் - சினம். கைலைஅம்கிரி - அம் சாரியை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the gods praised him, the Vedic sages blessed him in wonder,
  2. and the dwellers on earth bowed, Māruti went on, wrath rising within him,
  3. and was like Mount Kailāsa going off without the forehead-eyed God,
  4. saying, “I will crush that proud demon with the sword once more!”

What the poem says

With gods, sages and men all honouring him, Aṉumaṉ flies on, his anger against Irāvaṇaṉ growing. The poet compares him to Mount Kailāsa. When Irāvaṇaṉ once tried to lift that mountain, Civaṉ pressed it down with his toe and pinned him beneath it. Now it is as if the mountain itself, white like Aṉumaṉ, has set off on its own, without Civaṉ, to crush Irāvaṇaṉ a second time.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viṇṇavar ētta, vēta muṉivarar viyantu vāḻtta,
maṇṇavar iṟaiñcac, cellum māruti, maṟam uḷ kūra,
'aṇṇal vāḷ arakkaṉ taṉṉai amukkuveṉ iṉṉum! 'eṉṉāk
kaṇṇutal oḻiyac cellum kailaiyam kiriyum ottāṉ!