கம்பராமாயணம் 4814 · சுந்தர 2.26
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மாணிஆம் வேடம்தாங்கி - பிரமசாரியாகியகோலத்தை மேற்கொண்டு; மலர் அயற்கு - பிரம்ம தேவனைவிட; அறிவு மாண்டு - அறிவால் மாட்சிமை பெற்று; உலகுக்கெல்லாம் ஓர் ஆணியாய் - எல்லா உலகங்களுக்கும் ஒப்பற்ற அச்சாணிபோல அமைந்து; அறம் பொருள் - அறத்தையும் பொருளையும்; நிரப்பும் அண்ணல் - பூரணத்துவமடையச் செய்யும் அனுமன்; நெடுநாள்தீர்ந்த - நீண்ட நாட்களுக்குமுன் பிரிந்து போன; சேண்உயர் - மிக்க உயர்வினையுடைய; திரிதலைச் சிறுவன்தன்னை - திரிகூடம் என்னும் புதல்வனை; காணிய விரைவில் செல்லும் - காண்பதற்காக வேகமாகப் போகிற; கனகமால் வரையும் ஒத்தான் - பொன் வடிவமான மேருமலையைப் போன்றிருந்தான்.
அனுமன் திரிகூடமலையாகிய மைந்தனைத் தேடிச் செல்லும் மேருமலையைப் போன்றிருந்தான். நிலையில் திரியாது அடங்கும் அனுமனை மேருமலை என்றும் இல்லறத்திற்கும் துறவறத்திற்கும் ஆதாரமானது அனுமன் மேற்கொண்ட பிரம்மசரியம் ஆதலின் ஆணி என்றும் கூறினான். அயற்கு அறிவு மாண்டு - உருபு மயக்கம் (தொல் - சொல் 111) இராமபிரான் அனுமனை 'ஆணி இவ்வுலகுக்கு எல்லாம்' என முன்பு கூறினான் (3769).
ஆங்கிலம் · English translationAI
Translation
- The lord who has taken the guise of a celibate student, who surpasses in wisdom
- Ayaṉ on his flower, who is the one linchpin of all the worlds and makes dharma and wealth complete,
- was like the great golden mountain hurrying to see its son,
- the lofty three-peaked one, parted from it long ago.
What the poem says
A further image for the flying Aṉumaṉ: he is like golden Mount Mēru rushing south to visit its long-lost child, the three-peaked Tirikūṭam on which Ilaṅkai stands, which was broken off from Mēru long ago. The first lines praise Aṉumaṉ himself: a lifelong celibate, wiser than Piramaṉ, and the "linchpin" that holds the world in place. Irāmaṉ called him exactly that earlier in the story.