கம்பராமாயணம் 4815 · சுந்தர 2.27
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மழைகிழித்துஉதிர - மேகத்தைப் பிளந்துகொண்டு உதிரும்படி; மீன்கள் - நட்சத்திரங்கள்; மறிகடல் பாய - அலைகள் மடங்கும் கடலிலே பாயவும்; வானம் குழைவுற - ஆகாயம் நெகிழ்ச்சியடையவும்; திசைகள் கீற - திக்குகள் கிழிபடவும்; மேருவும் குலுங்க - மேருமலையும் அசையவும்; கோட்டின் முழை உடைக் கிரிகள் முற்ற - சிகரங்களில் குகைகளை உடையமலைகள் நீரால் சூழப் பெறவும்; முடுக்குவான் - வேகமாகச் செல்லும் அனுமன்; முடிவுக் காலத்து - ஊழிக் காலத்தில்; அழிவுறக் கடுக்கும் - யாவும் அழிந்துபடச் சினந்து செல்கின்ற; வேகத் தாதையும் அனையன் ஆனான் - வேகத்தையுடைய (தன்) தந்தையான வாயுதேவனைப் போலவும் இருந்தான்.
வான் வெட்டவெளியன்று. வெளியில் உள்ள நுண்ணிய பூதம். இது காற்றினும் நுட்பமானது. வானத்தை வெறும் வெளியாகக் கருதியவர்கள் அதற்குக் குழைவு இன்மையின் வான் என்பதற்கு விண்ணுலகு எனப் பொருள் கொண்டனர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So that the stars tore through the clouds and fell into the rolling sea, the sky
- buckled, the directions were rent, even Mēru shook, and the hills
- with caves in their peaks were engulfed, he sped on, and became like his father,
- the swift Wind that rages at the end of time to destroy all.
What the poem says
Aṉumaṉ's speed shakes the cosmos: stars tear through the clouds and drop into the sea, the sky bends, the directions split, Mēru quivers, and mountains are swamped. He is like his own father, the Wind god, in the fury of the storm that ends a world age. The commentary explains that "sky" here is the subtle element of space, which can bend, not empty void.