கம்பராமாயணம் 4817 · சுந்தர 2.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
புறத்துஉறல்அஞ்சி - வெளிப்படையாக இருக்கப் பயப்பட்டு; வேறுஓர்அரணம் புக்கு - மற்றொரு பாதுகாப்பான இடத்தில்; உறைதல் போக்கி - தங்குதலை விலக்கியும்; மனுவின் வந்த - மனிதனைப் போன்று மண்ணுலகுக்கு வந்த; திறத்தகை இராமன் என்னும் சேவகற் பற்றி - வலிமையும் தகுதியும் பெற்ற இராமபிரான் என்னும் வீரனை இறுகப் பிடித்துக் கொண்டு; மறத்தொழில் அரக்கன் வாழும் - வீரத்தையே தொழிலாகக் கொண்ட இராவணன் வாழுகின்ற; மாநகர் - பெரிய நகருக்கு; செல்லும் - போகிற; அறத்தகையரசன் - தகுதிபெற்ற தருமராஜனின்; திண்போர் ஆழியும் அனையன் ஆனான் - வலிமை மிக்க போர்புரியும் ஆணைச் சக்கரத்தை (அனுமன்) ஒத்திருந்தான்.
தருமராசன் (யமன்) இலங்கைக்குள் அடியெடுத்து வைத்தான் என்பது குறிப்பு. ஆதியில் தர்ம தேவதை என்றும் கூறலாம். திருமாலின் சக்கரம் என்று உரைகாண்பது அபசாரம். மனுவின் - மனிதனைப்போல், மனுகுலம் என்றும் கூறலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Afraid to stay out in the open, giving up any thought of hiding in some other fortress,
- to the great city where the demon of warlike deeds lives, holding fast
- to the hero called Irāmaṉ, mighty and worthy, who came in the line of Maṉu,
- he became like the strong battle-wheel of the King of Dharma, going on its way.
What the poem says
Another image for Aṉumaṉ in flight: he is like the wheel of command of Yama, the King of Dharma, on its way to Irāvaṇaṉ's city. Dharma, the verse imagines, no longer dares to stay exposed or hide in some other fortress; it clings to Irāmaṉ as its protector and travels with Aṉumaṉ into Ilaṅkai. The hint is that death and justice are now entering the demon's capital. The commentary rejects reading the wheel as Tirumāl's discus.