கம்பராமாயணம் 4818 · சுந்தர 2.30
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கேழ் உலாம் முழுநிலாவின் கிளர்ஒளி - எல்லா இடத்திலும் ஒளிபரப்பும் பூரண சந்திரிகையைப் போன்று கிளர்ச்சிபெற்ற (அனுமனின்) ஒளியானது; இருளைக் கீற - இருளைப் போக்கவும்; பாழி மா மேரு நாண - பருத்த மேருமலை நாணம் அடையவும்; விசும்பு உறப் படர்ந்த தோளான் - ஆகாயம் அளாவும் தோளையுடைய அனுமான்; ஆழிசூழ் உலகம் எல்லாம் முருங்க - கடலால் சூழப்பெற்ற எல்லா உலகங்களும் அழிய; அருங்கனல் உண்ணும் ஊழி நாள் - நெருப்பு விழுங்கும் ஊழிக் காலத்தில்; வடபால் தோன்றும் உவாமுழு மதியம் ஒத்தான் - வடதிசையில் உதிக்கும் பௌர்ணமிக் காலத்து முழு மதியையும் ஒத்திருந்தான்.
அனுமன் ஊழிக்காலத்தில் வடக்குத் திக்கில் உதிக்கும் முழுமதி போன்றிருந்தான். கேழ் - நிறம் (இங்கே வெண்மை ஒளி) மேரு, அனுமனுக்கு உவமை. நிலவு என்றது சந்திரிகையை - சந்திரனையன்று. சந்திரன் போன்றஒளியுடையவன். சந்திரன்
ஆங்கிலம் · English translationAI
Translation
- As his bright radiance, like the light of the full moon spreading everywhere, tore the darkness,
- he whose shoulders spread to fill the sky, putting even mighty Mēru to shame,
- was like the full moon of the full-moon day that rises in the north
- on the day of the end of the age, when dread fire devours the sea-girt world.
What the poem says
Aṉumaṉ glows white like moonlight, cutting through the dark, and his huge shoulders shame Mount Mēru. He is likened to a full moon rising unnaturally in the north on the day of universal destruction, when fire consumes the world. Like the sun image a few verses earlier, it is a portent of disaster for Ilaṅkai.