கம்பராமாயணம் 4819 · சுந்தர 2.31

Section சுந்தர காண்டம் / 2. கடல் தாவு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அடல் எல் ஆம் திகிரி மாயற்கு அமைந்த தன் ஆற்றல் காட்டக்,
குடல் எலாம் அவுணர் சிந்தக், குன்று எனக் குறித்து நின்ற
திடல் எலாம் தொடர்ந்து செல்லச், சேண் விசும்பு ஒதுங்கு அத்தெய்வக்
கடல் எலாம் கடக்கத் தாவும், கலுழனும் அனையன் ஆனான்!

பொருள் · Meaning in Tamil

அடல்உலாம்திகிரி மாயற்கு - அனுமன் பகைவரை அடக்குவதில் மிக்க வல்லமை பரவிய சக்கரப்படை ஏந்திய திருமாலுக்கு, அமைந்த தன் ஆற்றல்காட்ட - அடங்கிய தன்னுடைய வன்மையைக் காண்பிக்க; அவுணர் எலாம் குடல் சிந்த - எல்லா அசுரர்களும் குடல் கலங்கவும்; குன்று எனக் குறித்து நின்ற - மலை என்று பேசப்பட்டு நிமிர்ந்து நிற்கின்ற; திடல் எலாம் தொடர்ந்து செல்ல - மேடுகள் யாவும் தொடர்ந்து போகவும்; விசும்பு சேண் ஒதுங்க - ஆகாயம் தூரத்தில் ஒதுங்கிக் கொள்ளவும்; தெய்வக் கடல் எலாம் கலங்க - தெய்வத் தன்மையுடைய எல்லாச் சமுத்திரங்களும் கலங்கவும்; தாவும் கலுழனும் - பறந்து சென்ற கருடனையும்; அனையன் ஆனான் - ஒத்தவன் ஆனான்.

அனுமன் - தோன்றா எழுவாய். சக்கரப்படை ஏந்திய திருமாலுக்குத் தன்னுடைய வலிமையைக் காட்டப் பறந்து சென்ற கருட பகவானைப்போல அனுமன் விளங்கினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. To show the Māyaṉ who bears the mighty discus the strength that was his,
  2. so that the asuras spilled their entrails, and all the heights that stood and were called mountains
  3. followed after him, and the far sky drew aside, and all the divine
  4. seas were churned, he became like Kaluḻaṉ in his leap!

What the poem says

Once more Aṉumaṉ is compared to Garuḍa, here at the moment the eagle flew to show Tirumāl, bearer of the discus, how strong he was. The demons are terrified, hills are dragged along behind him, the sky seems to make room, and every ocean is stirred up.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṭal ulām tikiri māyaṟku amainta taṉ āṟṟal kāṭṭak,
kuṭal elām avuṇar cintak, kuṉṟu eṉak kuṟittu niṉṟa
tiṭal elām toṭarntu cellac, cēṇ vicumpu otuṅka, teyvak
kaṭal elām kalaṅkat tāvum, kaluḻaṉum aṉaiyaṉ āṉāṉ!