கம்பராமாயணம் 4820 · சுந்தர 2.32

Section சுந்தர காண்டம் / 2. கடல் தாவு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நாலினோடு உலகம் மூன்றும் நடுக்கு உற, அடுக்கும் நாகர்
மேல் இல் மேல் நின்ற காறும் சென்ற கூலத்தன், 'விண்டு
காலினால் அளந்த வான முகட்டையும் கடக்கக் கால
வாலினால் அளந்தான்! 'என்று, வானவர் மருளச், சென்றான்!

பொருள் · Meaning in Tamil

நாலினோடு உலகம்மூன்றும் நடுக்குற - கீழ் ஏழு உலகங்களும் நடுக்கம் அடைய; நாகர் மேலின்மேல் நின்ற - தேவர்கள் மேலும் மேலும் சிறப்புடன் நிலைத்துள்ள; அடுக்கு காறும் - அடுக்கப்பெற்ற உலகம் வரையிலும்; சென்ற கூலத்தன் - பயணம் செய்த வாலையுடைய அனுமன்; விண்டு காலினால் அளந்த வானமுகட்டையும் கடக்க - திருமாலின் திருவடியால் அளந்த வானத்தின் உச்சியையும் கடப்பதற்கு; கால வாலினால் அளந்தான் என்று - காலபாசம் போன்ற வாலினால் அளந்து விட்டான் என்று; வானவர் மருளச் சென்றான் - தேவர்கள் வியப்படையப் போயினான்.

மாயன் காலால் அளந்த உலகத்தை அனுமன் வாலால் அளந்தானோ என்று வானவர் மருண்டனர். கூலம் - வால். விண்டு - திருமால். கால வால் - கால பாசத்தை ஒத்தவால்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So that the four and the three worlds trembled, he whose tail reached up
  2. to the tiers where the gods stand ever higher and higher went on, while the gods marvelled,
  3. “The dome of the sky that Viṇṭu measured with his foot,
  4. he has gone beyond, measuring it with his deadly tail!”

What the poem says

Aṉumaṉ's tail stretches right up through the tiers of the heavens. The gods are astonished: Viṣṇu (Viṇṭu) once measured the sky with his foot, and now Aṉumaṉ seems to measure it, and go beyond it, with his tail. They call the tail "deadly", like the noose of Death, because it will bring ruin on the demons.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nāliṉōṭu ulakam mūṉṟum naṭukkuṟa, aṭukku nākar
mēliṉ mēl niṉṟa kāṟum ceṉṟa kūlattaṉ, 'viṇṭu
kāliṉāl aḷanta vāṉa mukaṭṭaiyum kaṭakkak kāla
vāliṉāl aḷantāṉ! 'eṉṟu, vāṉavar maruḷac, ceṉṟāṉ!