கம்பராமாயணம் 4854 · சுந்தர 2.66
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(அந்தச் சுரசை) பேழ்வாய் அரக்கி உருக்கொடு - பெரிய வாயை உடைய அரக்கி வடிவத்தை ஏற்று; பெட்பின் ஓங்கி - (மனித) ஆசைபோல் வளர்ந்து; கோள்வாய் அரியின் - வலிமை மிக்க குரங்கின்; குலத்தாய் - குலத்தில் பிறந்தவனே; கொடுங்கூற்றும் உட்க - கொடுமையான யமனும் அஞ்சும்படி; வாழ்வாய் - வாழ்வாயாக; எனக்கு ஆமிடமாய் வருவாய் என்னா - எனக்கு (உண்ணும்) மாமிசமாக வருவாயாக என்று; நீள்வாய் விசும்பும் - ஓங்கிய இடத்தைப் பெற்ற ஆகாயமும்; தனது உச்சி - தனது தலையை; நெருக்க நின்றாள் - அணுகி நெருக்கும்படி (வளர்ந்து) நின்றாள்.
சுரசை அரக்கி உருவத்துடன் குரங்கு மரபில் வந்தவனே எனக்கு உணவாய் வருவாயாக என்று கூறி நின்றாள். பேழ்வாய் - பெரியவாய் / பிளந்த வாய் என்றும் கூறலாம். ஆமிடம் - உண்ணும் மாமிசம். யான் இனி இதனுக்கு ஆமிடம். (கம்ப - 3604).
ஆங்கிலம் · English translationAI
Translation
- Taking the form of a gaping-mouthed demoness and swelling up with desire,
- “O you of the race of mighty-jawed monkeys! You who live so that even cruel Death fears you,
- will you come to be my meat?” she said,
- and stood so tall that the wide sky itself pressed against the top of her head.
What the poem says
Curacai, now a demoness with a cavernous mouth, grows as huge as her greed until her head touches the sky. She mockingly hails Aṉumaṉ as one whom even Death fears, then demands that he come and be her food.