கம்பராமாயணம் 4856 · சுந்தர 2.68
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நல்அறிவாளன் - நல்ல அறிவுடைய அனுமான் (சுரசையிடம்); நீ ஒரு பெண்பால் - நீ பெண்ணாக உள்ளாய்; பசிப்பீழை - பசியாகிய துன்பம்; ஒறுக்க நொந்தாய் - வருத்துவதால் துன்புற்றாய்; விண்பாலவர் நாயகன் - விண்ணுலகத்தவரின் தலைவனான இராமபிரானின்; ஏவல் இழைத்து மீண்டால் - கட்டளையைப் புரிந்து திரும்பினால்; எனது ஆக்கையை உண்பாய் - (அப்போது) என்னுடைய உடலை உண்பாயாக; நண்பால் உதவற்கு யான் நேர்வல் - நட்புடன் வழங்க நான் உடன்பட்டேன்; எனச் சொல்லினன் - என்று கூறினான்; நக்காள் - (அது கேட்டவுடன் சுரசை) ஏளனமாகச்சிரித்தாள். இராமபிரானின் கட்டளையை நிறைவேற்றி மீண்ட பிறகு நீ என்னுடைய உடம்பை உண்ணுக. நான் உனக்கு அதை வழங்குவேன் என்று அனுமன் கூறினான். அதுகேட்ட சுரசை சிரித்தாள். இங்கே விண் என்றது பரமபதத்தை. விண்பால் இருப்பாய் - என்னும் திருவாய்மொழிப் பாசுரத்துக்கு நம்பிள்ளை வரைந்த உரையைப் பார்க்கவும். பீழை - துன்பம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “You are a woman, alone, and you suffer as the pain of hunger torments you:
- you shall eat my body; I agree to give it to you
- in friendship, once I have done the bidding of the Lord of those in the heavens
- and come back,” said the wise one; and she laughed.
What the poem says
Aṉumaṉ answers Curacai courteously. She is a woman and suffering from hunger, so he will gladly give her his body to eat, but only after he has carried out the command of Irāmaṉ, lord of the gods, and returned. Curacai only laughs at the offer.