கம்பராமாயணம் 4857 · சுந்தர 2.69

Section சுந்தர காண்டம் / 2. கடல் தாவு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'காய்ந்து ஏழ் உலகங்களும் காண நின் யாக்கை தன்னை
ஆர்ந்தே பசிதீர்வன்! இது ஆணை! 'என்று அன்னள் சொன்னாள்.
ஓர்ந்தானும், 'இகந்து ஒருவேன்! நினது ஊழில் பேழ்வாய்ச்
சேர்ந்து ஏகுகின்றேன், வலையாம் எனில் தின்றிடு! 'என்றான்.

பொருள் · Meaning in Tamil

அன்னாள் - அந்தச்சுரசை; ஏழ் உலகங்களும் காண - ஏழ் உலகங்களும் பார்க்கும்படியாக; நின் யாக்கை தன்னை - உன்னுடைய உடம்பை; காய்ந்து - வாட்டி; ஆர்ந்து பசிதீர்வென் - உண்டு பசியாறுவேன்; இது ஆணை என்று - இது சபதம் என்று; சொன்னாள் - கூறினாள்; ஓர்ந்தானும் உவந்து - சுரசையின் எண்ணத்தை அறிந்த அனுமானும் மகிழ்ச்சியடைந்து; ஒருவேன் - நான் விலகிப் போகமாட்டேன்; நினது - உன்னுடைய; ஊழ்இல் பேழ் வாய் - முறை முடிவற்ற பெரிய வாயை; சேர்ந்து ஏகுகின்றேன் - அடைந்து செல்லப் போகின்றேன்; வலையாமெனின் - வலிமை உடையவள் ஆனால்; தின்றிடு என்றான் - தின்பாயாக என்று கூறினான். காய்தல் - சுடுதல், வாட்டுதல். புலாலைச் சுடும் முறையைப் பேசுகின்றான். காய்ந்து என்பதற்குக் கோபித்து என்று பொருள் கூறுவதில் சிறப்பு இருந்தால் ஏற்க. சினந்து உண்ணுதல் அரக்கியர்க்கு ஏற்கும் போலும். ஆணை - சபதம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “With all seven worlds looking on, I shall roast your body
  2. and eat my fill and end my hunger! This is my oath!” she said.
  3. And he, understanding her, was glad: “I will not turn aside! Into your endless gaping mouth
  4. I shall go and pass on; if you have the strength, eat me!” he said.

What the poem says

Curacai swears to roast and eat Aṉumaṉ in front of all the worlds. Aṉumaṉ sees what she is really after, a test of his strength, and gladly accepts the challenge. He will not go around her; he will go straight into her vast mouth and out again, and she may eat him if she is strong enough.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kāyntēḻ ulakaṅkaḷum kāṇa niṉ yākkai taṉṉai
ārntē paci tīrveṉ! itu āṇai! 'eṉṟu aṉṉāḷ coṉṉāḷ.
ōrntāṉum uvantu, 'oruvēṉ! niṉatu ūḻ il pēḻvāyc
cērntēkukiṉṟēṉ, valaiyāmeṉiṉ tiṉṟiṭu! 'eṉṟāṉ.