கம்பராமாயணம் 4858 · சுந்தர 2.70
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அக்காலை - அவ்வாறு அனுமன் கூறிய போதில்; அரக்கியும் அண்டம் அனந்தமாக - அரக்கியானவளும் அண்டங்கள் எல்லையறப் பெருகி, புக்கால் - புகுந்தாலும்; நிறையாத புழைப்பெருவாய் திறந்து - நிரம்பாத குகைபோன்ற பெரிய வாயைத் திறந்து; விக்காது விழுங்க நின்றாள் - விக்காமல் விழுங்குவதற்கு ஆயத்தமாக நின்றாள்; அது வீரன் நோக்கி - அவள் செயலை அனுமன் பார்த்து; திக்கு ஆர் அவள் வாய் - திசைகளைப் பொருந்திய அவளுடைய வாயானது; சிறிதாம் வகை - சிறிதாகும்படி; சேணில் நீண்டான் - ஆகாயத்தில் படிப்படியாக வளர்ந்தான்.
அரக்கியின் வாய் திசைகளின் எல்லையில் இருந்தது. அனுமன் பேருரு வானையளாவி இருந்தது. புழை - குகை. மேருப் புழை என தொக்கு அடங்கதெ துயில்தரு கண்ணினான் (யுத்த - கும்ப 68) அரக்கியும் இதில் உள்ள உம் - அசை. புக்காலும் என்பதிலுள்ள உம்மை தொக்கு புக்கால் என வந்துள்ளது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- At that, the demoness opened her cavernous huge mouth, which even endless
- universes could not fill if they went in,
- and stood ready to swallow him without choking; seeing it, the hero
- stretched himself up into the sky so that her mouth, wide as the directions, became small.
What the poem says
Curacai opens her mouth so wide that countless universes could not fill it, ready to gulp Aṉumaṉ down. In answer Aṉumaṉ grows even larger, rising into the sky until her horizon-wide mouth looks small beside him.