கம்பராமாயணம் 4859 · சுந்தர 2.71
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நீண்டான் - நீண்டுஉயர்ந்த அனுமன்; உடனே சுருங்கா - சடக்கெனத் தன்னைச் சுருக்கிக் கொண்டு; நிமிர்வாள் வயிற்றின் - ஓங்கி வளர்ந்த சுரசையின் வயிற்றில்; ஊண்தான் என உற்று - உணவு என்று சொல்லும்படி பொருந்தி; ஓர் உயிர்ப்பு உயிராத முன்னர் - அவள் ஒரு மூச்சு விடுவதற்கு முன்; மீண்டான் - வெளி வந்தான்; விண் உறைவோர்கள் - தேவர்கள்; அது கண்டனர் - அச் செயலைப் பார்த்தனர்; எம்மை ஆண்டான் வலன் என்று - எம்மைப் பாதுகாக்க வந்த அனுமன் வல்லமை உடையவன் என்று; அலர் தூஉய் நெடிது ஆசி சொன்னார் - மலர் தூவி நீண்ட ஆசி கூறினார்கள்.
நெடிது வளர்ந்து உடனே சுருங்கி வயிற்றில் நுழைந்து வெளி வந்தது அனுமனது சாதுர்யத்தையும் வல்லமையையும் உணர்த்தியமையால் தேவர் மகிழ்ந்தனர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He who had grown tall at once shrank down, went into the belly of her who towered up
- as if he were her food, and before she could draw a single breath
- came out again! The dwellers in heaven saw it: “The one who has taken us under his care is mighty!”
- they cried, and scattering flowers, they gave him their blessings at length.
What the poem says
Aṉumaṉ's trick: having grown huge, he suddenly makes himself tiny, darts into Curacai's mouth and down into her belly as if he were her meal, and comes out again before she can take a single breath. So he has kept his word to go through her and still passed on. The watching gods, delighted by his cleverness as well as his strength, shower him with flowers and blessings.